ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ஷிவம் துபேவுக்கு பெரிய அநீதி நடந்திருக்கிறது. துபே, எப்போதும் மிடில் ஓவர்களின்போது பந்துவீசக் கூடியவர். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், அவருக்கு சரியான பந்துவீச்சு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கடைசி ஓவரைதான் கொடுத்தார்கள்.
19 ஓவர்கள் முடிவில், ஆப்கானிஸ்தான் அணி 135/8 என இருந்தது. பும்ரா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் 4 ஓவர்களை நிறைவு செய்துவிட்டனர். இதனால், கடைசி ஓவரை பார்ட் டைம் பௌலருக்குதான் கொடுக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. நிதிஷ் ரெட்டி, 2 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்ததால், கடைசி ஓவரை அவரை நம்பி கொடுக்க முடியாது. இதனால், கடைசி ஓவரை ஷிவம் துபேவுக்கு கொடுத்தனர். அதுவரை ஓவரை கொடுக்காமல், வேறு வழியில்லாமல் கடைசி ஓவரை துபேவுக்கு கொடுத்தனர்.
அந்த கடைசி ஓவரில், துபே 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 21 ரன்களை விட்டுக்கொடுத்தார். அஜ்மதுல்லா 2 சிக்ஸர்களையும், முஜிப் உர் ரஹ்மான் 2 பவுண்டரிகளையும் அடித்தார்கள். இதனால், ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 158/8 ரன்களை எடுத்தது.
ஷ்ரேயஸ் ஐயர் பேட்டி: இப்போட்டி முடிந்தப் பிறகு, இந்திய அணிக் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், இதுகுறித்துப் பேசினார். துபேவுக்கு கடைசி ஓவரை கொடுத்தது, சரியான முடிவுதானா? வேறு வழியில்லாமல் அவருக்கு கடைசி ஓவரை கொடுத்தீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷ்ரேயஸ் ஐயர், ‘‘இது நியாயமற்ற அணுகுமுறைதான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வேறு வழி தெரியவில்லை. கடைசி ஓவரை வீச, மெய்ண் பௌலர்கள் இல்லை. இதனால்தான், துபேவுக்கு கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது’’ எனக் கூறினார்.
துபேவுக்கு மிடில் வரிசையில் ஒரு ஓவரை கொடுத்திருந்தால், சரியாக இருந்திருக்கும். ஆல்ரவுண்டராக துபேவை சேர்த்துவிட்டு, அவருக்கு சரியான வாய்ப்பை வழங்காமல், வேறு வழியில்லாமல் கடைசி ஓவரை கொடுத்திருப்பது, விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தில், இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யும்போது சிறப்பாக ஆட முடியும். இதனால்தான், இங்கு டாஸ் வெல்லும் அணிகள், முதலில் பந்துவீச விரும்புகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த குர்பாஸ் இரண்டு பந்துகளை எதிர்கொண்டு டக்அவுட் ஆனார். கேப்டன் இப்ராஹிம் ஜோர்டனும் 10 பந்துகளில் 11 ரன்னை மட்டும் அடித்து அவுட் ஆனார்.
செதிகுல்லா அடல் 13 (13), குல்பதீன் நபி 2 (6), ரசூலி 2 (6) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். பிறகு, அஜ்மதுல்லா ஒமர்ஜாய் 44 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 64 ரன்களை சேர்த்து அசத்திய நிலையில், முகமது நபி 33 பந்தில் 27 ரன்னை எடுத்து ஸ்கோரை உயர்த்தினார்கள். இதனால், ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 156/8 ரன்களை எடுத்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், அபிஷேக் சர்மா, 32 பந்துகளில் தலா 7 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்களை சேர்த்து அசத்தினார். இவருடன் சேர்ந்து, இஷான் கிஷன் 33 பந்துகளில் 42 ரன்களை எடுத்ததால், இந்திய அணி, 13.4 ஓவர்களிலேயே 157/3 ரன்களை எடுத்து வெற்றியைப் பெற்றது. சஞ்சு சாம்சன், 8 பந்தில் 10 ரன்களை மட்டும் சேர்த்து அவுட் ஆனார்.
