avudaiyar kovil siva temple சிவபெருமானே நேரில் வந்து திருவாசகத்தை எழுதி ஊர் எது தெரியுமா?

சைவ மரபில் உள்ள மிக உன்னதமான ஆன்மீக நூலாக கருதப்படுவது திருவாசகம். “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருவார்” என்பது ஆன்றோர் வாக்கு. இறைவன் சொல்ல மனிதன் கேட்டது, பகவத்கீதை. மனிதன் சொல்ல இறைவனே தன்னுடைய கையால் எழுதியது, திருவாசகம். வந்திருப்பது யார் என்று அறியாமல், மனதில் சிவனை நினைத்துக் கொண்டு, மாணிக்கவாசகர் கூறிய திருவாசகம் வரிகளை, சிவபெருமானே தனது கைப்பட எழுதி, கையெழுத்திட்டு கொடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்த அற்புதமான சம்பவம் நடைபெற்ற ஊர் இன்றும் நம்முடைய தமிழகத்தில் தான் உள்ளது.

சிவபெருமானே நேரில் வந்து, ஓலைச்சுவடியில் தனது கைப்பட திருவாசக வரிகளை எழுதிய ஊர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில். திருப்பெருந்துறை என்ற பெயராலும் இந்த தலம் அழைக்கப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்றாக இருக்கக் கூடிய இந்த கோவில், ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டிருக்காது. இந்த கோவில் பற்றி ரகசியங்கள் ஒன்றும் ஆச்சரியம் தருவாக இருக்கும். “இப்படி ஒரு சிவன் கோவிலா?” என ஆச்சரியப்பட வைக்கும். அப்படி என்னென்ன ஆச்சரியங்கள் இந்த கோவிலில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை) வரலாறு :

இந்த கோவில் பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்டதாகும். வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் உண்மையான பெயர், ஆத்மநாத சுவாமி கோவில் ஆகும். மாணிக்கவாசகருக்கு, சிவபெருமான் குரு வடிவில் வந்து உபதேசம் செய்து ஆட்கொண்ட தலம் இதுவாகும். 1100 ஆண்டுகள் பழமையான இக்கோவில் உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானது. சோழ நாட்டிற்கு சென்று நல்ல குதிரை வாங்கி வருமாறு பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியர் அளித்த பணத்தைக் கொண்டு மாணிக்கவாசகர் இந்த கோவிலை கட்டி உள்ளார். குதிரைகள் வாங்க வந்த மாணிக்கவாசகர், இறைவனின் குருல் கேட்டு ஈர்க்கட்டு, குதிரை வாங்க வைத்திருந்த பணத்தில் இந்த பிரம்மாண்ட கோவிலை எழுப்பி உள்ளார். இக்கோவிலில் கருவறை பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும், மற்ற பகுதிகள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கோவிலின் அதிசயிக்க வைக்கும் தனிச்சிறப்புகள் :

1. இங்கு சிவபெருமானுக்கு உருவம் கிடையாது. அதாவது, ஆவுடையார் எனப்படும் பீடம் மட்டுமே இருக்கும். இறைவன் இங்கு ஆத்மநாதராக, குருப (உருவமற்ற) நிலையில் அருள்பாலிக்கிறார்.

2. அனைத்து சிவன் கோவில்களிலும் கண்டிப்பாக இருக்கும் நந்தி, கொடிமரம், பலிபீடம், சண்டீகேஸ்வரர் ஆகிய எந்த அமைப்பும் இந்த ஆவுடையார் கோவிலில் கிடையாது. இத முற்றிலும் ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

3. திருவாரூர், திருநெல்வேலியை போல் தமிழகத்தில உள்ள பெரிய தேர்களைக் கொண்ட சில கோவில்களில் ஆவுடையார்கோவிலும் ஒன்று. வழக்கமாக 50 முதல் 500 பேர் கூடி இழுத்தால் எந்த தேரையும் இழுத்து விடலாம். ஆனால் ஆவுடையார்கோவில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால் தான் இழுக்க முடியும் என சொல்லப்படுகிறது.

4. இந்த கோவிலுக்குள் என்னென்ன சிலைகள் உள்ளனவே அவை அனைத்தையும் மரத்தால் செய்து, நான்கு திசைகளிலும் அமைத்து தான் இந்த தேரை வடிவமைப்பார்களாம். இந்த தேரை இழுப்பதற்கு பயன்படுத்தப்படும் வடக்கயிறு, நமது இரு கைகளையும் சேர்த்து பிடித்தாலும் கைகளுக்குள் அடங்காது.

5. ஆகமம், அறிவியல், மனித சக்தி என எதற்குள்ளும் அடங்காத தன்மை கொண்டது இக்கோவில் என்பது ஒவ்வொரு பொருளிலும் தெளிவுபடுத்தப்படுகிறது.

6. பெரிய பாறைகளை கொண்டு தூண்கள், மதில் சுவர்கள் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதால் இந்த கோவில் பூத கணங்களால் கட்டப்பட்ட கோவில் என இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

7. ஒரு கண்ணுடன், இன்னொரு கல்லை இணைத்து இக்கோவிலை எப்படி கட்டினார்கள் என்பது சிற்பிகளையே ஆச்சரியப்பட வைப்பதுடன், இன்று வரை இந்த ரகசியம் எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம்.

8. கற்சங்கிலி, மாணிக்கவாசகர் ஜோதியில் கலந்தது என அளவில்லாத ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கொண்டது தான் ஆவுடையார் கோவில்.

9. மூலஸ்தானத்தில் படைக்கல் என்ற 3 அடி உயரம், 7 அடி நீளம் கொண்ட திட்டுக்கல் உள்ளது. இந்த கல்லின் மீது தான் இறைவனுக்கு தினமும் 6 காலமும் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. வழக்கமாக அனைத்து கோவில்களிலும் பச்சரிசியால் மட்டும் தான் நைவேத்தியம் செய்து படைப்பார்கள். ஆனால் இந்த கோவிலில் புழுங்கல் அரிசியால் செய்த சாதம், அதோடு பாகற்காய் கறி மற்றும் கீரை சேர்த்து தான் நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

Source link