படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி; அதற்கு ஒரு காரணம் இருக்கு: விளக்கமளித்த சூரி

கோவை நவகரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக ‘மண்டாடி’ படக்குழுவினர் வருகை தந்தனர். 

எஸ்.பி வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: இதற்கு பின் என்ன நடக்கும் என கடவுளுக்குத் தான் தெரியும்; ஐகோர்ட் அதிருப்தி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, ”மண்டாடி படம் வெளியான பிறகு நமது தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று இந்த மீனவர்களின் வீர விளையாட்டான படகு சவாரி விளையாட்டிற்கும் அரசு உரிய அங்கீகாரம் அளிக்கும் என நம்புகிறேன். முதல் முறையாக எனது படம் ஐ மேக்ஸில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது.

’மண்டாடி’  படம்  நான் நடித்த ’விடுதலை’ படத்தைப் போலவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.  ’மண்டாடி’  படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் அமைவது தொடர்பாக படப்பிடிப்பின் போதே தான் கேள்வி எழுப்பியதாகவும் அப்போது கதைக்கு தேவை என்பதால் அது போன்ற காட்சிகள் இடம் பெற்றாலும் அதற்கு படத்தில் ஒரு மெசேஜ் கொடுத்துள்ளதாகவும் சூரி விளக்கமளித்தார். 

நம் மண் சார்ந்த படத்தில் நடித்த பெருமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய சூரி மேலும் அவர்களை உற்சாகப்படுத்த அவர்களுடன் நடனமாடினார். தொடர்ந்து வீர விளையாட்டுகளுக்கு இளம் தலைமுறையினர் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்த அவர் படிப்பிலும் கவனம் தேவை என்றார்.

பி.ரஹ்மான்

Source link