Business Ideas For Women,டிஃபின் பிசினஸ்: இல்லத்தரசிகளுக்கான அருமையான தொழில் – டிரை பண்ணி பாருங்க – house wife women can make a try on this tiffin service business from home to earn much

நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்து, வீட்டிலிருந்தே ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால் உங்களுக்காக ஒரு சிறந்த யோசனை உள்ளது. இந்தத் தொழிலின் மூலம் மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை எளிதாக வருமானம் ஈட்டலாம். இதன் மூலம் இல்லத்தரசிகளும் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளலாம். அதற்கு ‘டிஃபின் சர்வீஸ்’ (உணவு விநியோக சேவை) ஒரு சிறந்த தேர்வாகும். உங்கள் வீட்டில் உள்ள ஒரு சிறிய அறையிலிருந்தே இத்தொழிலை நீங்கள் தொடங்கலாம்.

சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பணிபுரியும் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் தனியாக வசிப்பவர்கள் பலர் உள்ளனர். வீட்டிலேயே சமைத்த உணவை அவர்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனெனில், அதிகம் செலவு செய்து கடைகளில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ன அவர்கள் பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். வேறு வழி இல்லாமலேயே அவர்கள் கடைகளில் சாப்பிடுவார்கள். அவர்கள் தினமும் வீட்டுச் சுவையுடன் கூடிய உணவையே பெரும்பாலும் தேடுகிறார்கள். இப்போது சிறிய நகரங்களிலும் கூட டிஃபின் சேவைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

எவ்வளவு முதலீடு தேவை?

உங்களிடம் ரூ. 5,000 முதல் ரூ. 15,000 வரை இருந்தாலே குறைந்த முதலீட்டில் இத்தொழிலை நீங்கள் தொடங்கலாம். இதற்குச் சமையலறை உபகரணங்கள், உணவுப் பொட்டலமிடும் பொருட்கள் மற்றும் விநியோக ஏற்பாடு ஆகியவை தேவைப்படும். சிறிய அளவில் தொடங்குவது உங்களை விரைவாக ஒரு தொழில்முனைவோராக மாற்றும். ஆரம்பத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு உணவு வழங்கி, ஒரு வேளை உணவுக்கு ரூ. 70 முதல் ரூ. 100 வரை கட்டணம் வசூலித்தால் மாதம் ரூ. 15,000 அல்லது அதற்கும் அதிகமாக வருமானம் ஈட்டலாம்.

வாடிக்கையாளர்களைக் கண்டறிவது எப்படி?

வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் உங்கள் தொழிலுக்கான வாடிக்கையாளர்களைக் கண்டறியலாம். அருகிலுள்ள தங்கும் விடுதிகள் மற்றும் அலுவலகங்களையும் நேரில் சென்று பார்க்கலாம். உங்கள் உணவு பிரபலமடையும் போது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல அதிகரிக்கும். ஆன்லைன் உணவு விநியோகச் செயலிகளிலும் உங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

பெண்களுக்கு ஏற்ற தொழில்!

வீட்டு வேலைகள் மற்றும் குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டே, வீட்டிலிருந்தபடியே வசதியாக நிர்வகிக்க முடிவதால் இந்தத் தொழில் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இதற்குப் பெரிய இடமோ அல்லது கடையோ தேவையில்லை. உங்கள் வீட்டுச் சமையலறையிலிருந்தே இந்தத் தொழிலை மிக எளிதாக நடத்தலாம். குறைந்த முதலீடு மற்றும் குறைந்த அபாயம் கொண்ட இந்தச் சேவைக்கான தேவை இந்தியாவில் இப்போது வேகமாக அதிகரித்து வருகிறது. வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட விரும்பும் பெண்களுக்கு டிஃபின் சேவை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இன்று வீட்டு முறை சமையல் உணவுக்கான தேவை அதிகமாக இருப்பதால் இந்தத் தொழிலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

Disclaimer:

எந்தவொரு தொழிலைத் தொடங்குவதற்கும் சரியான திட்டமிடலும் ஆலோசனையும் தேவை. பெரிய அளவில் முதலீடு செய்தால் அதிலுள்ள அபாயங்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இந்தச் செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Source link