Chennai News Live Updates: “எடப்பாடி கை காட்டுபவரே அடுத்த பிரதமர்” – ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

இன்று (3.9.2026, புதன்கிழமை) சென்னையில் ஒரு  லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை 

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சுமார் ரூ.8 ஆயிரம் வரை சரிந்திருந்த நிலையில், இன்று திடீரென விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • Sep 03, 2026 14:15 IST

    சென்னையில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: 187 பேர் பங்கேற்பு

    சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை, சென்னை ஹோட்டல் சங்கத்துடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டத்தை 02.09.2026 அன்று சென்னை தி.நகரில் உள்ள மத்ஸ்யா ஹோட்டலில் நடத்தியது. இக்கூட்டத்தில் உணவு நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய சுய தணிக்கை (Self-Audit) சரிபார்ப்புப் பட்டியல் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 187 பேர் பங்கேற்றனர்.

  • Sep 03, 2026 14:01 IST

    டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதல் வசூல்: மேலும் 150 ஊழியர்கள் சஸ்பெண்ட்

    தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்த ஊழியர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பணம் வசூலித்ததாக இதுவரை 217 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 150 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Sep 03, 2026 13:30 IST

    “எடப்பாடி கை காட்டுபவரே அடுத்த பிரதமர்!” – ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என பரபரப்பாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் உள்ளதாகவும், அவர் ஆதரிக்கும் அல்லது முன்னிறுத்தும் நபருக்கு பிரதமர் பதவியை அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் தனது கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமாரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

  • Sep 03, 2026 13:28 IST

    4 மணி நேரத்துக்குள் வீட்டு வாசலுக்கு கேஸ் சிலிண்டர் – இந்தியன் ஆயிலின் அதிரடி புதிய திட்டம்

    இந்தியன் ஆயில் நிறுவனம், பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது 10 கிலோ எடை கொண்ட ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ என்ற காம்போசிட் சிலிண்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக, சிலிண்டரை முன்பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த சேவை கடந்த ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10 கிலோ எடை கொண்ட சிலிண்டர் தேவைப்படுவோர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Source link