Chennai News Live Updates: எல்லாவற்றையும் குறை சொல்ல பிறந்தவர் சீமான்

Chennai News Live Updates: பெட்ரோல் மற்றும் டீசல் விலை

இன்று (2.9.2026, புதன்கிழமை) சென்னையில் ஒரு  லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் நிலவரம் 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,288 கனஅடியாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,721 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,288 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.80 அடியிலிருந்து 91.94 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 54.89 டிஎம்சியாக உள்ளது.

அடுத்த பிரதமர் விஜய் – கனிமொழி பேச்சு

தமிழக சட்டமன்றத்திற்கு இன்று வருகை தந்த த.வெ.க எம்.எல்.ஏ. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “2029-ம் ஆண்டில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வது தான் முக்கியமான விஷயம். ஆனால் இந்த முறை பிரதமரை டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவதில்லை. தமிழ்நாட்டில் இருந்துதான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யப்போகிறார்கள். 2029-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு மிகப்பெரிய மாற்றத்தை கண்டிப்பாக பார்க்கும்.

நமது தலைவர் விஜய்யை முதலமைச்சர் பதவியில் அமர வைத்ததே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். அவரே நமது தலைவரின் கையை பிடித்து 2029-ல் பிரதமர் பதவியில் அமர வைப்பார். 2025-ல் கணித்தது 2026-ல் நடந்தது. அதேபோல் 2029-ம் ஆண்டும் நடக்கும்” என்று தெரிவித்தார்.

  • Sep 02, 2026 13:44 IST

    எல்லாவற்றையும் குறை சொல்ல பிறந்தவர் சீமான் – மாணிக்கம் தாகூர் சாடல் 

    தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் பிக்பாஸ் போல் இருப்பதாக நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். இந்த நிலையில், இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்  “பிக்பாஸ் போல் இருக்கிறதா சட்டமன்றம்?” “என்டர்டெயின்மென்ட் துறையில் இருந்து வந்ததால் சீமான் பொழுதுபோக்காக பார்க்கிறார்; அண்ணன் சீமான் எல்லாவற்றையும் குறை சொல்ல பிறந்தவர் முதல்முறையாக சட்டமன்றம் நேரலை செய்யப்படுகிறது; அதை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

  • Sep 02, 2026 13:44 IST

    தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையப் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    சென்னை, தமிழ்நாடு, இந்தியா, உலகம் உள்ளிட்டவைகளின் இன்றைய சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையப் பக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Source link