பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தி.மு.க போராட்டம்: முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
-
Sep 12, 2026 07:37 IST
தொடங்கி வைக்கும் முதல்வர்
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு கார் பந்தயம் தொடங்குகிறது.
-
Sep 12, 2026 07:36 IST
அஜீத் உடன் அமைச்சர் ஆதவ்
நாளை நடிகர் அஜித்குமாரின் ரேஸை விஜய் தொடங்கி வைக்கவுள்ள நிலையில் இங்கிலாந்தின் சில்வர் ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் அஜித்குமாரை அமைச்சர் ஆதவ் சந்தித்துள்ளார்.
-
Sep 12, 2026 07:35 IST
தி.மு.க போராட்டம்
முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
-
Sep 12, 2026 07:35 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
