பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இன்று (3.9.2026, புதன்கிழமை) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விஜய்க்கு அஜீத் நன்றி
அரசு முன்வைத்துள்ள சிறிய அடி ஸ்போர்ட்ஸ் துறைக்கு பெரிய பாய்ச்சலாக அமையும். விளையாட்டு துறைக்கு முதலமைச்சர் விஜய் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். அவரின் அனைத்து முயற்சிகளும் சிறப்படைய வாழ்த்துகிறேன் என நடிகர் அஜித் நன்றி தெரிவித்துள்ளார்.
நவம்பரில் சோதனை ஓட்டம்
சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டத்தில் கோயம்பேடு – சென்னை நந்தம்பாக்கம் இடையிலான வழித்தடத்தில் நவம்பர் மாதத்தில் சோதனை ரயில் இயக்கத்தை தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சுமார் 26 கி.மீ நீளமுள்ள கோயம்பேடு – சென்னை வர்த்தக மைய வழித்தடத்தில் 90 சதவீத தண்டவாளப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சுமார் 1.5 கி. மீ தண்டவாளப் பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
-
Sep 04, 2026 07:39 IST
கோவில்களில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்த எதிர்ப்பு – தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் தமிழில் குடமுழக்கு (கும்பாவிஷேகம்) விழா நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
-
Sep 04, 2026 07:36 IST
துனை ஜனாதிபதி சென்னை வருகை – முக்கிய இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
வரும் 5ஆம் தேதி (நாளை) துணை குடியரசுத் தலைவர் சென்னை வருகை தருவதையொட்டி மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் மற்றும் வி.வி.ஐ.பி பயணிக்கும்
வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அன்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
