சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சீமானை தி.மு.க. ஆதரிப்பது ஒரு மளிவான அரசியல் – வன்னி அரசு
பிரச்னையை திசைதிருப்பும் வேலையை தான் தி.மு.க செய்கிறது. பார்ப்பன கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன் என்று சீமான் சொன்னபோது தி.மு.க. எதுவும் செய்யவில்லை. திருட்டு தி.மு.க என்று சொன்னபோது சீமானை அன்று தி.மு.க. கண்டிக்கவில்லை. கலைஞரை இழிவாக பேசிய சீமானையோ, கலைஞரின் பேனா சிலையை உடைப்பேன் என்று சொன்ன சீமானையோ தி.மு.க. கண்டிக்கவில்லை. அப்போது கண்டிக்காமல் இப்போது அவருக்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு மளிவான அரசியல்.
ஆரிய – திராவிட எதிர்ப்பை முன்னேடுக்கும் இந்தியாவில், ஆரிய கோட்பாட்டை உருவாக்கிக்கொண்ட சீமானை தி.மு.க. ஆதரிப்பது எந்த விதத்தில் சரி? இதுதான் நான் வைத்த கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் ஆ.ராசா போற்றவர்களை அறிக்கை விட வைத்து எங்களை திட்டுவதன் மூலமாக தி.மு.க. செயல்பாடு என்னவாக இருக்கிறது என்று மக்கள் மத்தியில் கேட்கிறேன் என் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
வெடி பொருட்களை ரயிலில் ஏற்றிச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை
நவ. 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் சூழலில், பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை ரயிலில் கொண்டு சென்றால் ரயில்வே சட்டப்பிரிவு 164ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 25, 2026 10:35 IST
பாரா ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
தமிழக வீரர், வீராங்கனைகளின் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது. தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனை உலகறியச் செய்துள்ளனர் என்று பாரா ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Oct 25, 2026 10:16 IST
திடீர் வெள்ளப்பெருக்கு – வெள்ளாற்றில் சிக்கிய 9 பேரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
தமிழக்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஆங்காங்கே நீர்நிலைகள் வேமாக நிரம்பி வருகிறது. இதனிடையே கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரங்கூர் வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஆற்றில் சிக்கிய 9 பேரை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
-
Oct 25, 2026 10:13 IST
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு மரணம்
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துசவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Oct 25, 2026 10:11 IST
விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை – த.வெ.க அரசுக்கு சீமான் கண்டனம்
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வானூர்தி எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சீமான தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? இந்த ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்கானதா? அல்லது தனியார் முதலாளிகளுக்கானதா? @CMOTamilnadu @TVKVijayHQ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வானூர்தி எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. பருப்பு முதல் எண்ணெய் பொருட்கள் வரை அனைத்தின விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை வானூர்தி நிலையத்தில் வானூர்தி எரிபொருள் மீதான வரியை 29 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகவும், பிற வானூர்தி நிலையங்களில் குறிப்பிட்ட வானூர்தி சேவைகளுக்கான வரியை 29 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாகவும் குறைத்திருக்கிறது. வானூர்தி நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய் அவர்கள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக தவெக அறிவித்தது. ஆனால், குறைந்த விலை என்றுகூறி சிறிதும் தரமற்ற அரிசியை தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாங்கும் விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதில் அலட்சியமாய் இருப்பது ஏன்? முதலமைச்சரின் கோட் சூட் உடை மாற்றத்தை தவிர தவெக அரசால் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றம்தான் என்ன? அரிசி வாங்குவதற்கே மக்கள் அல்லல்படும் அவலநிலைக்கு ஆளானதா? அல்லது தவெக நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை செய்வதும், போதைப்பொருள் விற்பதும்தான் மாற்றமா? அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, வானூர்தி பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது? இந்த ஆட்சி யாருக்கானது? அன்றாடம் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? பல்லாயிரம் கோடி முதலீட்டில் வானூர்தி நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா? வானூர்தி போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறும் அரசு, மக்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்கும் அதே அக்கறையைக் காட்ட வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை வானூர்திகள் பறக்கிறது என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது? என்பதில்தான் உள்ளது. மக்களின் வயிற்றுப்பசியைவிட வானூர்தி நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை. ஆகவே, தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் அக்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்டுங்கள்! – செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) October 25, 2026
