CSK – 40 கோடி கொடுத்தாலும், இதை என்னால பண்ண முடியாது: சிஎஸ்கே நிர்வாகத்துக்கு தோனி பதில் – ms dhoni rejects csk team offer for ipl 2027

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில், அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், மகேந்திரசிங் தோனிக்கு அணியின் ஆலோசகர் பணியை கொடுக்க நிர்வாகம் திட்டமிட்ட நிலையில், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். இம்பாக்ட் வீரர் விதிமுறை ஐபிஎல் 2027 சீசனிலும் இருந்தால், தோனியை இம்பாக்ட் வீரராக ஆட வைக்க வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், 4 கோடி அல்ல 40 கோடி கொடுத்தாலும் என்னால் இம்பாக்ட் வீரராக ஆட முடியாது என தோனி, திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, சிஎஸ்கே மீட்டிங்கில் பேசிய தோனி, ‘‘என்னால், இம்பாக்ட் வீரராக ஆட முடியாது. 20 ஓவர்களும், பீல்டிங் களத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். 4 கோடி அல்ல 40 கோடி கொடுத்தாலும், என்னால் இம்பாக்ட் வீரராக ஆட முடியாது’’ என திட்டவட்டமாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் சொல்லிவிட்டாராம்.

இதனால், தோனியை ஆலோசகராக நியமிக்கலாமா அல்லது அணியின் இயக்குநராக நியமிக்கலாமா என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

ஏலத்திற்கு வரும் தரமான வீரர்கள்: ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், அக்சர் படேல் போன்ற முக்கிய வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால், டிரேடிங்கில் எப்படி செயல்படுவது? சீனியர் வீரர்களை வாங்கலாமா? என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

மேலும், புது தலைமை பயிற்சியாளராக வெளிநாட்டு முன்னாள் வீரரை தேர்வு செய்வதா அல்லது இந்திய முன்னாள் வீரரை தேர்வு செய்வதா என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் பெயர்களையும் பரிந்துரை லிஸ்டில் சிஎஸ்கே வைத்துள்ளதாம்.

மேலும், காலியாக உள்ள இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்பவும் முக்கியத்துவம் கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோரை குஜராத் டைடன்ஸில் இருந்து வாங்க வேண்டும் அல்லது டெல்லி கேபிடல்ஸில் அணியிடம் இருந்து அக்சர் படேலை வாங்க வேண்டும் என்ற முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்ற ரவீந்திர ஜடேஜா, இன்னமும் சிஎஸ்கே ஜெர்ஷியில் இருக்கும் புகைப்படத்தைதான் டிபியாக வைத்துள்ளார். இதனால், அவர் மீதும் ஒரு கண் வைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டிரேடிங்கில், ரவீந்திர ஜடேஜா கிடைத்தால், அவரை வாங்கவும் முடிவு செய்துள்ளார்கள்.

இப்படி, ஐபிஎல் 2027 சீசனுக்கான முன் தயாரிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த மூன்று சீசன்களின் பிளே ஆப் சுற்றுகளுக்கு சிஎஸ்கே அணியால் முன்னேற முடியாத காரணத்தினால், சிஎஸ்கேவின் மதிப்பு சரிய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, மற்ற அணிகள் அசால்ட்டாக 200+ ரன்களை அடித்து வரும் நிலையில், சிஎஸ்கேவால் 170 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாத நிலைமைதான் இருந்தது. இதனால், மற்ற அணிகளைப் போலவே, அதிரடி சரவெடி பேட்டிங் வரிசையை கட்டமைக்கும் கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது.

Source link