தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை
இதையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று
வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்
07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040
06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520
05-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520
04-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880
02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்
06-08-2026- ஒரு கிராம் ரூ.255
05-08-2026- ஒரு கிராம் ரூ.255
04-08-2026- ஒரு கிராம் ரூ.255
03-08-2026- ஒரு கிராம் ரூ.255
02-08-2026- ஒரு கிராம் ரூ.250
