நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், 181 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணி, 19.5ஆவது ஓவரில், இலக்கை துரத்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில், நியூசிலாந்து அணி செய்த மூன்று முக்கிய தவறுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
1.குறைந்த ஸ்கோர்: நியூசிலாந்து அணி, முதல் 13 ஓவர்களில் 81 ரன்களைதான் அடித்தது. பிறகு, கடைசி 7 ஓவர்களில்தான், 99 ரன்களை விளாசினார்கள். டிம் செய்பர்ட், பின் ஆலன், டேரில் மிட்சில் ஆகிய மூன்று பேட்டர்களும் சேர்ந்து, 25 பந்துகளில் 29 ரன்களைதான் அடித்தார்கள். இதுதான், தோல்விக்கு முதல் முக்கிய காரணமாக இருக்கிறது.
2.பெவன் ஜாகப்ஸ் சொதப்பல்: பினிஷர் ரோலில் ஆடிய பெவன் ஜாகப்ஸ், 46 பந்தில் 126.09 ஸ்ட்ரைக் ரேட்டில் 58 ரன்களைதான் சேர்த்தார். இவர், அதிரடியாக விளையாடியிருந்தால், நியூசிலாந்து அணி, 200+ ரன்களை குவித்திருக்கும். ஜாகப்ஸ் ஆடியபோது, பிட்ச் பேட்டர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தது. இதனால்தான், இவருடன் ஆடிய பிலிப்ஸ் 43 பந்தில் 70 ரன்களை குவித்திருந்தார்.
3.மேட் ஹென்ட்ரிக்கு ஓவர் இல்லை: நியூசிலாந்து பௌலர் மேட் ஹென்ட்ரி, 2 ஓவர்களில் 11 ரன்களைதான் விட்டுக்கொடுத்தார். இவரை, டெத் ஓவரில் பயன்படுத்தவில்லை.
மேலும், ஸ்பின்னர்களை தவிர்த்து, மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாண்ட்னர், 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்த நிலையில், பிரேஸ்வெல், 4 ஓவர்களில் 35 ரன்களைதான் விட்டுக்கொடுத்தார்.
மேலும், நியூசிலாந்து பௌலர்கள், கடைசி நேரத்தில், அதிகமான ஷார்ட் பால்களை வீசினார்கள். இதனை பயன்படுத்தி, திலக் வர்மா தொடர்ச்சியாக மிரட்டலாக விளையாடினார். இப்படி, அதிக ஷார்ட் பால்களை, டெத் ஓவர்களில் வீசியதால், டெத் ஓவர்களில் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 68 ரன்களை குவித்து அசத்தியது. இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
நியூசிலாந்து ஸ்கோர்: முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், பிலிப்ஸ் 70 (43), ஜாகப்ஸ் 58 (46) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். இதனால், நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 180/5 ரன்களை எடுத்தது.
இந்திய அணி வெற்றி : இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், முதல் 5 பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. சாம்சன் 17 (14), அபிஷேக் சர்மா 27 (21), சூர்யவன்ஷி 4 (8), கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 7 (11), அக்சர் படேல் 11 (9) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், திலக் வர்மா 51 (26), நமன் தீர் 31 (17), நிதிஷ் ரெட்டி 26 (13) ஆகியோர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியதால், இந்திய அணி, 19.5 ஓவர்களில் 181/6 ரன்களை அடித்து வெற்றியைப் பெற்றது.
குறிப்பாக, கடைசி 3 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், திலக் வர்மா, இந்த 3 ஓவர்களில் மட்டும் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி, தனியொருவான ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார்.
