IND vs NZ Live Score, 2nd T20I: தொடக்க ஜோடியை இழந்த இந்தியா… வெளுத்து வாங்குவாரா சூரியவன்ஷி?

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒரு நாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடந்து வருகிறது. இதன்படி, கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டி-20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 12:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Source link