IPL 2027 – கேகேஆர் அணிக்கு புதுக் கேப்டன் இவர்தான்: ஹர்திக்கால் அதிர்ஷ்டம் பெற்ற வீரர் தேர்வு – kkr team finalised new captain for ipl 2027

ஐபிஎல் வரலாற்றில், சரியான கேப்டன்ஸி கிடைக்காமல் இருக்கும் அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்று. தொடர்ச்சியாக கேப்டன்களை மாற்றி வருகிறது. 18 சீசன்களில் 9 கேப்டன்களை பயன்படுத்தியுள்ளனர். இதில், கௌதம் கம்பீர் மட்டுமே அதிகமுறை கேப்டனாக இருந்தார். 2011 முதல் 2017 வரை கேப்டனாக செயல்பட்டார். மற்ற எந்த கேகேஆர் அணிக் கேப்டனும் 2 வருடங்களை தாண்டியது கிடையாது.

இதனால், ஐபிஎல் 2027 சீசனில் இருந்து நிரந்தர கேப்டனை விளையாட வைக்க முடிவு செய்துள்ளனர். 32 வயதாகும் ஹர்திக் பாண்டியாவை வாங்கி, அடுத்த 3 சீசன்களுக்கு கேப்டனாக விளையாட வைக்க முடிவு செய்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோரை கேட்டதால், கேகேஆர் அணி நிர்வாகம் பின்வாங்கியது.

முக்கிய ஆலோசனை: இந்நிலையில், ஐபிஎல் 2027 சீசனுக்கு யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்பது குறித்து கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. குறிப்பாக, கேப்டனாக தேர்வு செய்யப்படும் வீரர், குறைந்தது அடுத்த 5 வருடங்களுக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், புதுக் கேப்டன் குறித்து பரிசீலனை செய்தனர்.

முதலில் கேமரூன் கிரீன், ராசின் ரவீந்திரா போன்ற வெளிநாட்டு வீரர்களின் பெயர்களை பரிசீலனை செய்த நிலையில், இறுதியில், ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிங்கு சிங்கிற்கு தற்போது 28 வயதாகிறது. இவரை கேப்டனாக நியமித்தால், அடுத்த 5-6 வருடங்களுக்கு கேப்டன்ஸி பிரச்சினை இருக்காது. ஐபிஎலில் மொத்தம் 73 போட்டிகளில் 62 இன்னிங்ஸ் களமிறங்கியிருக்கும் ரிங்கு சிங், 34 சராசரியில், 145.97 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,394 ரன்களை அடித்தார். இதில், 6 அரை சதங்கள் அடங்கும். ஒரு போட்டியில், அதிகபட்சமாக 83* ரன்களை அடித்துள்ளார். இந்த 62 இன்னிங்ஸ்களில் 114 பவுண்டரி, 67 சிக்ஸர்களை அடிக்க முடிந்தது.

கௌதம் கம்பீருக்கு 7 வருடங்கள் வரை கேப்டன்ஸி கொடுத்ததால் 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுகொடுத்தார். அதன்பிறகு, யாருக்கும், 2 வருடங்களுக்கு மேல் கேப்டன்ஸி கொடுக்கப்படவில்லை. இப்படி, அடிக்கடி கேப்டன்களை மாற்றியதுதான், அதிக கோப்பைகளை வெல்ல முடியாததற்கு காரணாக கேகேஆர் அணி நிர்வாகம் கருதுகிறது. இதனால்தான், ரிங்கு சிங்கை கேப்டனாக நியமித்து, நீண்ட காலத்திற்கு ஆட வைக்க முடிவு செய்துள்ளனர்.

குறையை சரி செய்ய முயற்சி: கேகேஆர் அணியில், டாப் ஆர்டரில் ஆடக் கூடிய பேட்டர்கள், நிரந்தர பேட்டர்களாக இருப்பதில்லை. கேகேஆர் அணியில், இதுவரை டாப் 4 பேட்டர்களின் இடங்களை ரெகுலராக மாற்றி வருகிறார்கள். இதுவும் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆகையால், ஐபிஎல் 2027 சீசனில், டாப் 4 இடங்களில் இருக்க கூடிய பேட்டர்களை, ரெகுலராக அதே இடத்தில் ஆட வைக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும், விக்கெட் கீப்பர் இடத்திலும் கூட டிம் செய்பர்ட், பில் ஆலன் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள்தான் இருக்கிறார்கள். ஆகையால், ஐபிஎல் 2027 சீசன் ஏலத்தில் அடுத்து 2028ஆம் ஆண்டு மெகா ஏலத்தில், ஒரு தரமான இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரை வாங்கவும் கேகேஆர் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Source link