Krishna Jayanti 2026 Astrology,ஜென்மாஷ்டமி 2026: கிருஷ்ணரின் அருளைப் பெற 12 ராசிகளும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் மற்றும் வழிமுறைகள் – janmashtami 2026: simple remedies and practices for all 12 zodiac signs to seek lord krishna’s blessings

2026 ஆம் ஆண்டு கிருஷ்ணன் ஜென்மாஷ்டமி செப்டம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த அற்புத நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ண ராய் பக்தியுடன் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம்முடைய அனைத்து துன்பங்கள் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சியும், கிருஷ்ணரின் அருள் பெற்றிடலாம். 12 ராசிகள் செய்ய வேண்டிய எளிய பரிகார வழிபாடுகளை தெரிந்து கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம், சந்திரன் உச்சம் பெறக்கூடிய ரிஷப ராசியில், சந்திரன் அதிபதியாக இருக்கக்கூடிய ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த அற்புத நாளில் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தி உடன் வழிபடுவதால் உன்னுடைய பாவங்கள் நீங்குவதோடு, நம்முடைய சிந்தனை நல்ல விதத்தில் மாறும். செப்டம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படக்கூடிய கிருஷ்ணன் ஜென்மாஷ்டமி நாளில் 12 ராசிகள் பின்பற்ற வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

மிதுனம் கடக ராசி

மிதுன ராசி
புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி நண்பர்கள் இந்த கிருஷ்ண ஜெயந்தி அற்புத நாளில், பச்சை நிற ஆடைகளை அணிவதும், கிருஷ்ணருக்கு பச்சை நிற ஆடையை அணிவிப்பதும் நன்மை தரும். மேலும் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த பசுக்களுக்கு, பசும்புல்லை உணவாக அளிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
கடக ராசி
சந்திர பகவானை அதிபதியாக கொண்ட கடக ராசி சேர்ந்தவர்களுக்கும், இரவில் கொண்டாடப்படக்கூடிய இந்த கிருஷ்ணன் ஜெயந்தி திருநாளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சந்திரன் உச்சம் பெற்ற இந்த அற்புத நாளில் நீங்கள் வெளிர் நீல அல்லது வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ணரை வழிபாடு செய்யவும். மேலும் கிருஷ்ண பகவானுக்கு வெள்ளை நிற மலர்களை சமர்ப்பித்து, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை நைவேத்தியமாக படைத்து வழிபடவும்.

மேஷ ராசி

மேஷ ராசி அதிபதி செவ்வாய் கிரகம் என்பதால் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாளில், சிவப்பு அல்லது காவி நிற ஆடைகளை அணிவதும், பூஜையின் போது, ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிவப்பு சந்தனத்தை திலகம், வைத்து, துளசி மாலை பயன்படுத்தி, ‘ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.மேலும் இந்த நாளில் பகவான் கிருஷ்ணருக்கு லட்டு, வெள்ளம் கற்கண்டு ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைப்பது நன்மை பயக்கும்.

ரிஷப ராசி

சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியில் சந்திரன் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், இந்த ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் அவதரித்ததாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த அற்புத நாளில் ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிந்து, கிருஷ்ண பகவானுக்கு வெண்மை நிறமான மலர்கள் மற்றும் நறுமணப் பொருட்களை சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாடு உங்களுக்கு நற்பலன்களை தரும். அதற்கே வெண்ணை மற்றும் வெள்ளை நிற கற்கண்டு ஆகியவற்றை நைய்வேதியமாக படைத்து வழிபாடு செய்யவும்.

சிம்மம், கன்னி ராசி

சிம்ம ராசி
சூரிய பகவானே அதிபதியாக கொண்ட சிம்ம ராசி அன்பர்கள் இந்த அற்புத திருநாளில், மஞ்சள் அல்லது பொன்னிற ஆடைகளை அணிந்து கிருஷ்ணராய் வழிபாடு செய்வதும், ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து தியானிப்பது நன்மை தரும். மேலும் இந்த அற்புத நாளில் குங்குமப்பூ கலந்த பாயாசம் அல்லது மஞ்சள் நிற பழங்களை கிருஷ்ணருக்கு நைய்வேத்தியமாக படைத்த வழிபாடு செய்யவும்.
கன்னி ராசி
புதன் பகவான் ஆளக்கூடிய கன்னி ராசி அன்பர்களுக்கு, இந்த கிருஷ்ண ஜெயந்தி அற்புத நாட்டில் வெள்ளை பச்சை நிற அல்லது பிஸ்தா நிற ஆடைகளை அணிந்து பூஜையில் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யவும். மேலும் இந்த திருநாளில் அருகில் உள்ள கோசலைக்கு சென்று, பசுவுக்கு பலன்கள், பசும்புல்லை உணவாக கொடுக்கவும். கிருஷ்ணருக்கு உலர் பலன்களை படைத்த வழிபடவும்.

துலாம், விருச்சிக ராசி

துலாம் ராசி
சுக்கிரன் ஆளக்கூடிய துலாம் ராசியை சேர்ந்தவர்கள் இந்த கிருஷ்ண ஜெயந்தி அற்புத நாளில் வெள்ளை நிற அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து பக்தியுடன் வழிபாடு செய்யவும். மேலும் வெண்ணெய், கல்கண்டு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கவும். திருமணமான தம்பதியர், ராதாகிருஷ்ணன் சிலை அல்லது படத்தை வைத்து வழிபடவும்.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவான் அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த அற்புத திருநாளில் சிவப்பு அல்லது நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யவும். மேலும் அன்றைய தினம் கிருஷ்ண பகவானுக்கு மாதுளை, கொய்யா போன்ற பழங்களையும் படைப்பதும் சிவப்பு நிற மலர்களை சாற்றி வழிபாடு செய்யவும். மேலும் இரவு வழிபாட்டின் போது கிருஷ்ண சகஸ்ரநாமம் அல்லது கீதையின் 12 வது அத்தியாயம் பாராயணம் செய்யவும்.

தனுசு ,மகர ராசி

தனுசு ராசி
குருவின் அருள் நிறைந்த தனுசு ராசி நண்பர்களுக்கு கிருஷ்ணன் ஜென்மாஷ்டமி அற்புத நாளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ணரை வழிபடுவதோடு, கிருஷ்ணருக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் திலகம் இடவும். இந்த அற்புதத் திருநாளில் ஏழை சிறுவர்களுக்கு புத்தகங்கள் அல்லது ஆடைகளை தானமாக கொடுக்கலாம். மேலும் கிருஷ்ண பகவானுக்கு கடலை மாவு உள்ளது, மஞ்சள் நிறம் இனிப்பு வகைகளை படைத்து வழிபாடு செய்யவும்.

மகர ராசி
மகர ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு இந்த ஆண்டு ஜென்மாஷ்டமி திருநாளில் நீங்கள் நீல நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ணரை வழிபாடு செய்யவும். மேலும் இந்த நாளில் கிருஷ்ணரின் குழந்தை வடிவம் சிலைக்கு எள் நீரில் கலந்து அபிஷேகம் செய்வது நன்மை தரும். இதன் மூலம் கிருஷ்ணரின் அருள் கிடைப்பதோடு, சனி பகவானால் ஏற்படக்கூடிய இன்னல்களும் நீங்கும். மேலும் இனிப்புகளை குழந்தைகளுக்கு வழங்கவும்.

கும்பம், மீன ராசி

கும்ப ராசி
கும்ப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு, இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் வான் நீலம் அல்லது அடர் நீல நிற ஆடைகளை அணிந்து ஸ்ரீ கிருஷ்ணரின் வழிபாடு செய்வது நல்லது. மேலும் இந்த அற்புத நாளில் ஏழைகள், ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் அல்லது உதவுவது நன்மை தரும். மேலும் இந்த அற்புத நாளில் கிருஷ்ணரை வழிபாடு செய்து வெண்ணையை மற்றும் துளசி இலையை நைய்வேத்தியமாக படைக்கவும்.

மீன ராசி
குருபகவானை அடிபடையாகக் கொண்ட மீன ராசியை சேர்ந்தவர்கள், இந்த நாளில் மஞ்சள் அல்லது தங்க நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ணரை பக்தியுடன் வழிபாடு செய்யவும். மேலும் கிருஷ்ணருக்கு மஞ்சள் நிற மலர்கள், மாலையை சுற்றி, குங்குமப்பூ கலந்த இனி, மஞ்சள் நிற இனிப்புகளை படைத்து வழிபடுவது நன்மை தரும். மேலும் கிருஷ்ண பகவானை மனதில் நினைத்து தியானம் செய்யவும்.

Source link