Kriti Sanon Bikini Ad Controversy: "அவரை யார் தடுத்தது?" – மீண்டும் கிருத்தி சனோனுக்கு கங்கனா பதில்!

ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை குறித்து நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு கிருத்தி சனோன் அளித்த பதிலும் இணையத்தில் வைரல் ஆனது. ஒரு நகைக் கடை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் கிருத்தி சனோன் மாடர்ன் உடையை அணிந்து நடித்திருந்தார்.

Kriti Sanon

இது பற்றி கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இன்றைய பெண்களுக்கு ஜீன்ஸ், புடவை, சுடிதார், பிகினி என எத்தனையோ ஆடை தேர்வுகள் இருக்கும்போது, ரக்ஷா பந்தன் போன்ற ஒரு பாரம்பரிய விழாவிற்கு சகோதரருக்கு ராகி கட்டும்போது ஏன் பிகினி போன்ற உடையில் வர வேண்டும்?

இந்த விளம்பரம் வேண்டும் என்றே தவறாக வடிவமைக்கப்பட்டது போல் இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிருதி சனோன், “பண்டிகைகளின் முக்கியத்துவம் நாம் அணியும் ஆடையில் இல்லை. அந்தப் பாரம்பரியத்தின் உணர்வுகளில்தான் இருக்கிறது.

பெண்களுக்கு என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? பண்பாடும் பாரம்பரியமும் இதயத்தில் இருக்க வேண்டுமே தவிர, உடைகளின் கழுத்துப்பகுதியில் அல்ல” எனக் காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

கிருதி சனோனின் இந்த பதிலுக்கு தற்போது மீண்டும் பதிலடி கொடுத்துள்ள கங்கனா ரனாவத், “அவர் என்ன ஆடை வேண்டுமானாலும் அணியலாம், அவரை யார் தடுத்தது? இன்றைய நவீன பெண்ணுக்குப் பல ஆடை தேர்வுகள் உள்ளன.

ஆனால் பாரம்பரியமான ஒரு நிகழ்வின்போது எது பொருத்தமான ஆடை என்ற கேள்விதான் எழுகிறது” எனக் கூறியிருக்கிறார்.

இந்த ஆடை விவாதம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவவே, சம்பந்தப்பட்ட அந்த நகை நிறுவனம் அந்த விளம்பரத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் உடனடியாக நீக்கியது.

Source link