Mars Debilitation In Cancer Effects,நீசம் அடையப்போகும் செவ்வாய் சிக்கலை அதிகரிக்கும்: செப்டம்பர் 18க்கு பிறகு கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிபலன் – mars in debilitation: 5 zodiac signs that may need to be cautious after september 18

செவ்வாய் பகவான் செப்டம்பர் 18ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். அங்கு தான் மிகவும் குறைவான பலனை தரக்கூடிய நீச நிலை அடைய உள்ளார். இருப்பினும் உச்சம் பெற்ற குருவுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால், சில ராசிகளுக்கு நன்மை கிடைத்தாலும், சனியுடன் நவபஞ்சம யோகத்தை உருவாக்குவதால், சிலருக்கு சாதகமற்ற பலன்களை தரக்கூடியதாக இருக்கும்.

செப்டம்பர் 18ஆம் தேதி மாலை 4.34 மணிக்கு தனது நீட்ச வீடான கடக ராசியில் நுழையுள்ளார். செவ்வாய் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு பாதகமான விளைவுகளை தரக்கூடும். சனி உடன் நவபஞ்ச யோகத்தையும், கேது உடன் த்வித்வாதச யோகத்தை’ உருவாக்குகிறார். இதன் தாக்கம் ராசிகளை தாண்டி, உலகத்தின் மீது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தப்படும். கடக ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் எந்தெந்த ராசிகளுக்கு எதிர்மறையான சில பாதிப்புகள் ஏற்படலாம் என தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

ரிஷப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி ஆனது சில சாதகமற்ற பலன்களை தரக்கூடியதாக இருக்கும். செவ்வாய் பகவான் பலவீனமடைந்து சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு உடல் நலம் தொடர்பான சில சிக்கல்கள் சந்திக்க நேரிடலாம். மேலும் மனதளவில் தைரியம் குறைவது, உடல் ஆற்றல் குறைவது என சில சிரமங்களை சந்திப்பீர்கள். இந்த காலத்தில் நீங்கள் தீய நட்பை கண்டிப்பாக தவிப்பது அவசியம். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சொத்து தொடர்பான சில விஷயங்களில் கவனக் குறைவாக இருக்க வேண்டாம்.

பரிகாரம்
செவ்வாய்க்கிழமைகளில் அருகில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வரவும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களுக்கு செவ்வாய் பகவானின் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருப்பதால், எதிர்பாராத செலவுகள் ஏற்படுதல், உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைப்பதில் தாமதம், சில உடல்நலம் பாதிப்புகள் ஏற்படுவது என தொந்தரவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக இந்த காலத்தில் சில விஷயங்கள் மன கவலையில் ஆழ்த்துவதால், நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு ரத்தம் தொடர்பான ஏதேனும் பிரச்சினை இல்லாத நோய் இருந்தால் கூடுதல் கவனம் தேவை. பணியிடத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் வேலையில் நேர்மறையான முடிவுகளை காண்பீர்கள்.
பரிகாரம்:
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அருகில் உள்ள அனுமன் கோயில் என்றும் பூந்தி பிரசாதம் படைத்து வழிபடவும். முருகன் கோயில் வழிபாடு செய்ய தவறாதீர்கள்.

தனுசு ராசி

தனுசு ராசி சேர்ந்த நண்பர்களுக்கு உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தை செவ்வாய், நீசம் நிலை அடைய உள்ளார். இதன் காரணமாக உங்களுடைய செயல்பாடுகளில் ஆற்றல் குறைவாக உணர்ந்தீர்கள். மேலும் ஒரு செயலை செய்து முடிப்பதற்கான ஒரு விவேகம் இல்லாமல் செயல்படுவீர்கள்.

இந்த காலத்தில் கல்வி தொடர்பாக சவால்களை சந்திக்க நேரிடும். காதல் விஷயத்தில் குழப்பமான மனநிலை இருக்கும். நீண்டகாலமாக நிலுவையில் இருக்கக்கூடிய பணிகளை முடிக்க போராடுவீர்கள். சீரான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம்.

பரிகாரம்:

அனுமன் சாலீசாவைத் தொடர்ந்து பாராயணம் செய்யவும்.

மகர ராசி

செவ்வாய் பகவான் மகர ராசிக்கு சம சப்தம ஸ்தானத்தில் சம்சாரம் செய்ய உள்ளார். பொதுவாக இந்த அமைப்பானது நல்ல பலனை தரும் என்றால், அவர் நீச நிலையில் இருப்பதால் எதிர்பார்த்த பலன் குறைபாடு கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உங்கள் வாழ்க்கை உடல் நலனில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

பல் அல்லது எலும்பு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும். இந்த காலத்தையும் உங்களுடைய கடின உழைப்பிற்கான பலன் உடனடியாக கிடைக்காது. அதனால் பொறுமையுடன் செயல்படவும்.

பரிகாரம்:

‘ஓம் க்ராம் க்ரீம் க்ரோம் ஸஹ பௌமாய நமஹ’ என்ற மங்களகரமான மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்கவும்.

மீன ராசி

மீன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமற்ற பலனை தரக்கூடியதாக அமையலாம். உங்களுடைய பணிகளை முடிக்க சிரமங்களை சந்திக்க நேரிடும். திட்டமிடாத வேலைகளை முடிக்க போராட்டமான நிலை ஏற்படலாம். இந்த காலத்தில் உங்களுடைய பணியிடத்தில் சக ஊழியர்களிடம், குடும்பத்தில் உடன் பிறந்தவர்களிடமும் உறவில் சற்று விரிசில் ஏற்படலாம். அதனால் உங்கள் பேச்சில் நிதானத்தை, பழகுவதில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
எந்த ஒரு செயலையும் ஒழுக்கத்துடன், திட்டமிட்ட முறையில் செயல்படுவது நல்லது. தந்தை ஸ்தானத்தில் இருப்பவர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும்.
பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைகளில் உப்பு உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

Source link