அமளியில் ஈடுபட்ட திமுகவினர்; அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்
தமிழக சட்டமன்றத்தின் கடைசி நாள் இன்று… நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

திமுகவினரின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், “இது பொதுக்கூட்ட மேடை அல்ல, கட்சி கூட்ட மேடை அல்ல. திமுகவினர் அமைதியாக இருந்தால் பேச அனுமதிப்பேன்” என்று கூறினார்.
இருப்பினும் தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறார்.
இதனால் அவைக்காவலர்கள் சபைக்குள் வரவழைக்கப்பட்டு, அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
