Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 செப்டம்பர் 2026: கிருத்திகை

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-17 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சப்தமி பின்னிரவு 2.08 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : கார்த்திகை நள்ளிரவு 12.56 மணி வரை பிறகு ரோகிணி

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு

கிருத்திகை விரதம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீ பாலமுருகருக்கு தங்க ரதக்காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் – சாந்தம்

ரிஷபம் – உதவி

மிதுனம் – பணிவு

கடகம் – பக்தி

சிம்மம் – கடமை

கன்னி – சுகம்

துலாம் – விருத்தி

விருச்சிகம் – சுபம்

தனுசு – நன்மை

மகரம் – அனுகூலம்

கும்பம் – வெற்றி

மீனம் – ஊக்கம்

Source link