செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் வாரமான செப்டம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரையிலான இந்த வார காலத்தில், பல்வேறு கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் அதன் மூலம் யோகங்கள் உருவாக உள்ளன. இந்த வாரத்தில் கன்னி ராசியில் புதன் உதயம் ஆகிறார். சூரியன் கன்னி ராசியிலும், செவ்வாய் கடக ராசியிலும் பெயர்ச்சியாக உள்ளனர். கிரகங்களின் இந்த பயிற்சிகளால் ஏற்படக்கூடிய யோகங்கள் மட்டுமில்லாமல், இந்த வாரத் தொடக்கத்தில் முழுமுதற் கடவுள் கணபதியின் அவதாரமான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. வாரத்தில் இந்த ராசிகள் அதிகம் நம்மை பெறுவார்கள் என்று தெரிந்து கொள்வார்.
இந்த வாரத்தில் நடக்க இருக்கும் கிரகப்பெயர்ச்சிகள்
வாரத்தின் முதல் நாளான செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க கூடிய புதன் உதயமாகிறார். செப்டம்பர் 17ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இதன் மூலம் புரட்டாசி மாதம் தொடங்க உள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி செவ்வாய் மற்றும் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். உச்சம் பெற்ற குருவுடன் இணையுள்ளார். இது போன்ற கிரக சூழலில் கடக ராசியில் நீச பங்க ராஜயோகம், துலாம் ராசியில் சுக்கிரன் காலாக்ஷி யோகத்தை உருவாக்கும்.
2026 செப்டம்பர் 14 முதல் 20 வரையிலான அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேஷம் வார அதிர்ஷ்ட ராசிபலன்
மேஷ ராசிக்கு இந்த வாரம் பல வழிகளில் சிறப்பான பலன்கள் மற்றும் வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய வேலை அல்லது, கல்வி தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். உத்தியோகம் செய்யக்கூடிய அன்பர்களுக்கு நல்ல காலமாக அமையும். புதிய வேலையை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகலாம். உங்களுடைய நிதி நிலைமை மேன்மை அடையக் கூடிய நாள்.
இந்த வாரத்தில் பணியிடத்தில் பதவி உயர்வு, இந்த கௌரவம் கிடைக்கும். சமூகத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு சாதக சூழல் உருவாகும். உங்கள் வாழ்க்கை துணையுடன் உறவு மேம்படும். நீண்ட நாட்களாக இருந்து வரக் கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண வரன் தேடக்கூடிய அன்பர்களுக்கு நல்ல துணை கிடைக்கும்.
இந்த வாரத்தில் உங்களுடைய மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்கவும்.
ரிஷபம் அதிர்ஷ்ட வார ராசிபலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் பலவிதத்தில் சாதக பலன்களை பெறுவீர்கள். உங்களுடைய நிதிநிலை சார்ந்த விஷயங்களிலும், தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் வெற்றியை காண்பீர்கள். அதன் மூலம் குடும்பத்தின் பொருளாதார நிலை அதிகரிக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், செலவுகளை கட்டுப்படுத்துவதும் நன்மை தரும்.
உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் விலகும். உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும். உங்களுடைய சிறப்பான அணுகுமுறை வீட்டிலும் பணியிடத்திலும் மரியாதை பெற்று தரும்.
கடகம் அதிர்ஷ்ட வார ராசிபலன்
கடக ராசி அன்பர்களுக்கு உங்கள் ராசியில் உருவாக கூடிய நீசபங்க ராஜயோகம், உங்களுடைய வாழ்க்கையில் ஏறு முகத்தை தரக்கூடியதாக இருக்கும். நீண்டகாலமாக நீங்கள் செய்த கடின உழைப்பிற்கான நல்ல பலனை அனுபவிப்பீர்கள். பணியிடத்தில் உங்களுடைய பணி பாராட்டப்படும். மேலும் உங்களுக்கு குறிப்பிடத்தக்க பொறுப்புகள், பதவி உயர்வு கொடுக்க வாய்ப்பு உண்டு.
நீங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கக்கூடிய வேலையில் வெற்றிகரமாக முடிக்க முடியும். உங்களுடைய நிதி நிலை மேம்பட கூடும். வருமான ஆதாரமும் அதிகரிப்பதால், அதை சரியான விதத்தில் சேமிக்க அல்லது முதலீடு செய்வதற்கு ஆலோசிக்கவும். நீங்கள் முடித்த சில வேலைகளில் இருந்து குறிப்பிட்ட லாபம் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடன் இணைந்து இதற்கான தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அது தொடர்பாக உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்தவும்.
துலாம் அதிர்ஷ்ட வார ராசிபலன்
துலாம் ராசி நண்பர்களுக்கு இந்த வாரத்தில் உங்கள் ராசி அதிபதி சுக்கிரனின் ஆட்சி பெற்று சித்தரிக்க கூடிய மாளவிய யோகா பலன் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கக் கூடியதாக இருக்கும். உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் திருகரத்தக்க சில நேர்மறையான தாக்கங்களை அனுபவிப்பீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவையும் பெறுவீர்கள்.
வேலையில்லாதவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உங்கள் துணையுடன் உறவு மேம்படும். திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். நிதிநிலைமை அதிகரிக்கும்.
தனுசு வார அதிர்ஷ்ட ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த வாரத்தில் உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக முன்னேற்றத்தையும், வெற்றியையும் தரக்கூடியதாக இருக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் நிறைவேறும். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது தொழில் முன்னோக்கி எடுத்துச் செல்ல சில உதவிகள் கிடைக்கும்.
வேலை அல்லது தொழில் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய நபர்களின் தொடர்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வேலைகள் முடிக்க முடியும். நிதி நிலையம் படிப்படியாக மேம்படக்கூடிய வாரம். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிடக் கணக்கீடுகள் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. எந்த முடிவுக்கும் வருவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரை அணுகவும்.
