WI vs PAK 1st Test – கடைசி நேரத்தில், மே.இ.தீவுகள் அதிரடி கம்பேக்: தடுமாறும் பாகிஸ்தான் அணி – west indies team winning chance in 1st test vs pakistan team

மேற்கிந்தியத் தீவுகள் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, டிரினிடட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

மே.இ.தீவுகள் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில், கவிம் ஹெட்ஜ் 84 (183), ஷாய் ஹோப் 92 (182) ஆகியோர் பெரிய ஸ்கோரை அடித்தனர். மற்ற எந்த பேட்டரும் 25 ரன்களை கூட தாண்டவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அணி, 10 நோபால் ரன், 3 ஒயிட் ரன் உட்பட 29 எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கியது. இறுதியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 311/10 ரன்களை எடுத்தது.

பாகிஸ்தான் இன்னிங்ஸ்: அடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணியில், ஓபனர் உமாம் உல் ஹக் 63 (102), ஒன் டவுன் பேட்டர் ஷான் மசூத் 109 (184) ஆகியோர் அபாரமாக செயல்பட்டு அசத்தினார்கள். இதனைத் தொடர்ந்து, கேப்டன் பாபர் அசாம் 23 (38), சல்மான் அகா 20 (60) போன்றவர்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 282/10 ரன்களை மட்டும் எடுத்து, 29 ரன்கள் பின்தங்கியது.

மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸ்: முதல் இன்னிங்ஸை தொடர்ந்து, பிட்ச் பௌலர்களுக்கு சாதகமாக மாறியது. இதனால், இரண்டாவது இன்னிங்ஸில், மேற்கிந்தியத் தீவுகள் அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. ஓபனர் சந்தர்பாலை 35 (101) தொடர்ந்து, அடுத்து வந்த 7 பேட்டர்களும் பெரிய ரன்களை அடிக்கவில்லை.

அடுத்து, இறுதிக் கட்டத்தில், ஷமர் ஜோசப் அபாரமாக செயல்பட்டு, 27 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 38 ரன்களை குவித்து அசத்தினார். இப்படி, கடைசி நேரதில் ஷமர் ஜோசப் அபாரமாக செயல்பட்டதால், ஷமர் சிறப்பாக செயல்பட்டதால், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 181/10 ரன்களை எடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 211 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தனர்.

பாகிஸ்தான் தடுமாற்றம்: 211 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. பாகிஸ்தான் அணி, நான்காவது நாள் முதல் செஷன் முடிவில் 28/3 என இருக்கிறது. இன்னமும் 183 ரன்கள் தேவைப்படுகிறது. கேப்டன் பாபர் அசாம் 16 (25), முகமது ரிஸ்வான் 1 (9) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

பிட்ச் தொடர்ச்சியாக வேகத்திற்கு சாதகமாக இருப்பதாலும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஹோம் கிரோண்ட் ஆதாயம் இருப்பதாலும், பாகிஸ்தான் அணி, வெற்றிக்காக கடுமையாக போராடியாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.

இத்தொடரில் வெல்லும் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சற்று ஏற்றம் காணும். இத்தொடரை இழக்கும் அணி, ஒற்றை இலக்க புள்ளியைப் பெறும் மோசமான நிலைமை ஏற்படும் என்பதால், இத்தொடர், இரு அணிகளுக்கும் ஒரு கௌரவ பிரச்சினையாகவே மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link