Xல் தேசிய அளவில் டிரெண்டாகும் அஜித் குமார்: காரணம் ஐயா ரசிகர்களின் அதிருப்தி

அஜித்தின் அறிக்கை: ஆசைப்பட்டதை செய்ய வயது ஒரு தடை கிடையாது என்று கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார் அஜித் குமார். இதற்காக அவர் துபாயில் வசித்து வருவதும் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் ஜோசப் விஜய். அங்கு ஃபார்முலா 2, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 பந்தயங்கள் நடத்தப்படும் வகையில் பந்தயத் தடம், பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றார் விஜய்.

அவர் சட்டசபையில் பேசிய வீடியோவை ஷேர் செய்து எல்லாம் நம்ம நண்பர் அஜித் குமாருக்காக தான் என்றார்கள் விஜய் ரசிகர்கள் . அந்த அறிவிப்பு வந்த நிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அஜித் குமார். மேலும் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதை பார்த்த விஜய் ரசிகர்களோ, நண்பர் அஜித்துக்கு தான் முதல்வர் மீது எவ்வளவு மரியாதை என பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐயா ரசிகர்கள்: ஆனால் அந்த அறிக்கையை பார்த்து அஜித் குமார் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அஜித் மீதான தங்கள் வருத்தத்தை #AjithKumar என்கிற ஹேஷ்டேகுடன் எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். அதனால் அந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகியிருக்கிறது. அஜித் குமார் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. தற்போது எல்லாம் எக்ஸ் பக்கம் வரவே பிடிக்கவில்லை. இந்த அறிக்கைக்கு பிறகு எக்ஸ் தளத்திற்கு வரப் போவது இல்லை. நாங்கள் குடும்பத்தை பார்க்கப் போகிறோம்.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கருத்தா பேசிவிட்டு தற்போது மக்கள் பணத்தில் ஸ்போர்ட்ஸ் சிட்டி வரப் போவதற்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்கள். போதும் ஐயா உங்களுக்கு ரசிகர்களாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.

விஜய் ஃபேன்ஸ்: அதே சமயம் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள். இனி அஜித் குமார் ஐயா விஜய்ணா பக்கம். ஏ.கே. ரசிகர்கள் எல்லாம் ஓரமா போங்க. தலக்கு தளபதி மீது எப்பொழுதுமே பாசம் உண்டு. அண்ணாவுக்கும் ஐயா மீது பாசம் இருக்கிறது. அதனால் தான் அவருக்காக ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கவிருக்கிறார். அஜித் ஆதரவு கிடைத்துவிட்டது. இனி விஜய்ணா புது தெம்புடன் செயல்படுவார். ரொம்ப நன்றி நண்பர் அஜித் ஐயா என்கிறார் விஜய் ரசிகர்கள்.

முன்னதாக அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமான செய்தி அறிந்ததும் த்ரிஷா கிருஷ்ணன் உடன் அவரின் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார் முதல்வர் விஜய். அந்த வீடியோ வைரலாகி பலரும் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்கள்.

கிளாடியேட்டர்ஸ், டேர்டெவில்: கெரியரை பொறுத்தவரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர்டெவில் படத்தில் நடிக்கிறார் அஜித் குமார்.விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. அந்த படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் ஷாலினி அஜித் குமார். டேர்டெவில் படத்தை தயாரிப்பதுடன் அதில் கவுரவத் தோற்றத்தில் வருகிறார் ஷாலினி என்று கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வரும் ஷாலினி தற்போது டேர்டெவில் மூலம் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையே அஜித் குமார் ரேஸிங் அணி பற்றிய ஆவண படமான கிளாடியேட்டர்ஸ் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. அதற்கு அற்புதமாக இசையமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு போன் செய்து பாராட்டியிருக்கிறார் ஏ.கே.

Source link