அமெரிக்காவிலிருந்து வணிக வாய்ப்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரூ. 50க்கும் குறைவாக இருந்த இந்நிறுவனப் பங்குகளின் விலை 17 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நிறுவனம் மற்றும் அதன் பங்குகளின் செயல்பாடுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
50 ரூபாய்க்கும் குறைவான மதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் விலை பெரிய அளவில் தனது முதலீட்டாளர்களுக்கு லாபத்தைத் தந்துள்ளது. எக்ஸ்டிஜிளோபல் இன்ஃபோடெக் லிமிடெட் ( XTGlobal Infotech Ltd .) நிறுவனத்தின் பங்குகள் இன்று (செப்டம்பர் 4) முதலீட்டாளர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளன. அமெரிக்க மாநில அரசு ஒன்றின் தொழில்நுட்ப ஆணையத்தால் பல வருட கிளவுட் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் திட்டத்திற்கான தகுதி வாய்ந்த தொழில்நுட்ப பங்காளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக எஸ்டிஜிளோபல் இன்ஃபோடெக் லிமிடெட் நிறுவனம் அறிவித்ததை அடுத்து அன்று அதன் பங்கு விலை உயர்ந்துள்ளது.
17 சதவீத உயர்வு!
எஸ்டிஜிளோபல் இன்ஃபோடெக் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு 30.30 ரூபாயில் வர்த்தகத்தைத் தொடங்கி, முந்தைய முடிவு விலையான 29.73 ரூபாயில் இருந்து 17.73 சதவீதம் உயர்ந்து அதிகபட்சமாக 35.00 ரூபாயை எட்டியது. எனினும், வர்த்தக அமர்வின் முடிவில் சில லாபங்களை இழந்து, முந்தைய மூடலில் இருந்து 6.22 சதவீதம் உயர்ந்து 31.58 ரூபாயில் நிறைவடைந்தது.
வணிகத்தின் மதிப்பு எவ்வளவு?
இத்திட்டம் தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதனை மூன்று முறை தலா ஒரு வருடத்திற்கு நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. அனைத்து நீட்டிப்பு விருப்பங்களும் பயன்படுத்தப்பட்டால், இத்திட்டம் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாம். எதிர்பார்க்கப்படும் ஐந்தாண்டு காலத்தில் தகுதிவாய்ந்த விற்பனையாளர் குழு (vendor pool) மூலம் 50 மில்லியன் அமெரிக்க டலர் முதல் 100 மில்லியன் அமெரிக்க டலர் வரை மொத்த வணிக வாய்ப்பை இத்திட்டம் உருவாக்கக்கூடும் என்று எக்ஸ்டிஜிளோபல் இன்ஃபோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகுதிவாய்ந்த விற்பனையாளர் குழு மூலம் தொழில்நுட்பத் தேவைகள் எழும் போது, நிறுவனம் தனிப்பட்ட திட்டங்களுக்கு ஏலம் எடுக்கத் தகுதி பெறும். அதாவது, இது ஒரே ஒரு நிலையான விலை ஒப்பந்தத்திற்கான தேர்வு அல்ல; மாறாக இந்தத் திட்டத்தின் கீழ் பல திட்டங்களுக்கு எக்ஸ்டிஜிளோபல் நிறுவனம் ஏலம் எடுக்க அனுமதிக்கிறது.
கிளவுட், ஏஐ மற்றும் பிற தொழில்நுட்ப சேவைகள்!
இத்திட்டம் கிளவுட் இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (AI/ML), ஜெனரேட்டிவ் ஏஐ ஆகியவற்றை முக்கியப் பகுதிகளாகக் கொண்டு பரந்த அளவிலான தொழில்நுட்பத் தேவைகளை உள்ளடக்கியது. இது டேட்டா இன்ஜினியரிங், டெவ்செக்ஆப்ஸ் (DevSecOps), கிளவுட் செக்யூரிட்டி, பின்ஆப்ஸ் (FinOps), ஆட்டோமேஷன் மற்றும் பிற தொழில்நுட்ப சேவைகளையும் உள்ளடக்கியது. இத்திட்டத்தின் பரந்த நோக்கத்தின் காரணமாக, ஒரு குறிப்பிட்ட பணி அல்லது திட்டம் எழும் போதெல்லாம் பல்வேறு தொழில்நுட்ப முன்முயற்சிகளில் பங்கேற்க எஸ்டிஜிளோபல் நிறுவனத்திற்கு வாய்ப்பு உள்ளது.
எக்ஸ்டிஜிளோபல் இன்ஃபோடெக் நிறுவனம் பற்றி..!
எக்ஸ்டிஜிளோபல் இன்ஃபோடெக் லிமிடெட் என்பது எண்டர்பிரைஸ் அப்ளிகேஷன்ஸ், கிளவுட், டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன், அப்ளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் மாடர்னைசேஷன், குவாலிட்டி இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்ட் சர்வீசஸ் ஆகியவற்றில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட ஒரு தொழில்நுட்ப சேவைகள் நிறுவனமாகும். இந்நிறுவனம் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. இது பொதுத் துறை, போக்குவரத்து, சுகாதாரம், நிதி, சில்லறை விற்பனை மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.
Disclaimer:
இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காகவே வழங்கப்பட்டுள்ளது. பங்குகள், ஐபிஓ-க்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நாங்கள் பரிந்துரைக்கவில்லை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகுவது நல்லது.
Source link
