முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலான 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது அசன் மவுலானா ரூ.17.03 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கணக்கு சமர்ப்பித்தார். நாளிதழ்களில் வெளியான விளம்பர செலவுகளை காங்கிரஸ் கமிட்டி ஏற்றதாக கூறி கணக்கில் காட்டவில்லை என புகார் எழுந்தது.
அழிந்து போன மிதக்கும் அண்டார்டிகா; ஒரு பாலி தீவே காணாமல் போய்விட்டது: தரைமட்டமான 40 ஆண்டுகால சாம்ராஜ்யம்
இதைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் கண்காணிப்புக் குழுவின் ஆய்வில் ரூ.32.05 லட்சம் செலவிட்டது உறுதியானது. இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு தேர்தலில் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் அசன் மவுலான 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அசன் மவுலானா உண்மையான, நேர்மையான தேர்தல் கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமீறல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாததால் சட்ட அமைப்பின் அடிப்படை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
