அதிக வெப்பத்திற்கு முடிவு; தென் தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

சாதனை வெப்பம் நிலவிய தென் தமிழகப் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 05) மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வரும் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பது மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தென் உள் மாவட்டங்களான மதுரை – சிவகங்கை – விருதுநகர் முதல் புதுக்கோட்டை வரை உள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டும் பெய்யாமல், பரவலாகக் கிடைக்கக்கூடும் என்பதால், கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கலாம். இதில், திண்டுக்கல் – தேனி – தென்காசி பகுதிகளில், இடியுடன் கூடிய மழைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

அதேபோல், நெல்லை – ராமநாதபுரம் – தூத்துக்குடி பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும், உள் மாவட்டங்களின் மையப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது மழை பரவலாகவோ அல்லது ஒரு சில இடங்களில் மட்டுமோ பெய்யக்கூடும் என்று பதிவிட்டுள்ளார்,

அதேபோல் வடகிழக்கு தமிழகம் (KTCC – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு) பகுதிகளில், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், அருகிலுள்ள சில பகுதிகளில் மழையின்றி வறண்ட நிலை நீடிக்கலாம். மற்ற உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில்
சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Source link