பிக் பாஸ் 10-ல் கலந்து கொள்கிறேனா?

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமயல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கடந்த ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இதற்காக காவல் துறை, நீதிமன்றம் என சட்ட போராட்டம் நடத்தினார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் இவரது குற்றச்சாட்டுகளை மறைக்க தொடர்ந்து வழக்கு நடந்து வந்தது. இதனிடையே ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு டிஎன்ஏ டெஸ்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தான் தான் தந்தை என்பது நிருபனமானது. இதையடுத்து குழந்தையை ஏற்றுகொண்டு ஜாய் கிரிசில்டாவுடன் சமீபத்தில் குழந்தைகு மொட்டை அடித்தார் மாதம்பட்டி ரங்கராஜ். 

இந்த நிலையில் ஜாய் கிரிசில்டா பிக் பாஸ் சீசன் 10-ல் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. அது குறித்து தற்போது அவரே தெளிவாக விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “கடந்த சில நாட்களாக, நான் ‘பிக் பாஸ் சீசன் 10’-ல் கலந்து கொள்வதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. இதற்காக எனக்குக் கிடைத்த அன்பு, ஆதரவு, தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வாழ்த்துகளைக் கண்டு நான் நெகிழ்ந்து போனேன். முதலாவதாக, இத்தகைய அற்புதமான வாய்ப்பிற்கு என்னைப் பரிசீலித்துத் தேர்ந்தெடுத்த விஜய் டிவி-க்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக நான் மிகவும் நன்றியுடனும் பெருமையுடனும் உணர்கிறேன்.

ஆனால், நான் ‘பிக் பாஸ் சீசன் 10’ வீட்டிற்குள் நுழையப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதற்கான முக்கிய காரணம் என் செல்லக் குழந்தை ‘ராகா’ தான். அவன் இன்னும் மிகச் சிறியவன். அவனை விட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு செல்வது தாயாக சரியாக இருக்காது. எனவே, இந்த வாய்ப்பு வந்தபோது, ​​அதை மரியாதையுடன் மறுத்துவிட்டேன். இது எனக்கு எளிதான முடிவு கிடையாது. ஆனாலும் எனக்கு என் குழந்தை தான் முக்கியம்” என்றுள்ளார். 

Source link