அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு: சுவிஸ் மாடல் புகார்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெட்ரைஸ் கெவுல் என்பவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எப்ஸ்டீன் உடன் டிரம்ப்புக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கும் அமெரிக்க பார்லிமென்டின் ஜனநாயக கட்சி குழுவிடம் அவர் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

என்ன குற்றச்சாட்டு

கெவுல் அளித்த குற்றச்சாட்டில், 1993ம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில், டிரம்ப்பை முதலில் சந்தித்தேன். எப்ஸ்டீன் உடன் டிரம்ப்பும், நானும் சிறிது நேரம் செலவிட்டோம். அதன் பிறகு ஓட்டல் அறையில் டிரம்ப் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனத் தெரிவித்துள்ளார்.

மறுப்பு

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள வெள்ளை மாளிகை, டிரம்ப்பின் நடவடிக்கைகளால் குடியரசு கட்சிக்கு அதிகரிக்கும் செல்வாக்கை ஏற்க முடியாமல் அதனை திசை திருப்ப ஜனநாயக கட்சியினர் முயற்சி செய்கின்றனர் என தெரிவித்துள்ளது.

Source link