கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை உயர்ந்து வந்தது. வியாழக்கிழமை சவரனுக்கு அதிரடியாக ரூ.2,160 குறைந்த தங்கம் விலை, அதன் பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி (ஜூலை 27), சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது:
22 காரட் ஆபரணத் தங்கம்:
கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் தங்கம்:
கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.11,030-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.88,240-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு, நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
