அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா

Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் பெலாரசின் சபலென்காவை வீழ்த்தி கஜகஸ்தானின் ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

எலினா ரிபாகினா

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

முதல் செட்டில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட சபலென்கா இரண்டாவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-2 என வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ரிபாகினா சாம்பியன்

இதன்மூலம் எலினா ரிபாகினா முதல் முறையாக அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா, சபலென்காவைச் சாய்த்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link