அரசியை அதிரவைத்த மோதிரம்.. ரோஜாவின் திட்டத்தால் நடக்கப்போவது என்ன? – சாமந்தி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
சாமந்தி சீரியலின் நேற்றைய எபிசோடில் மருது இன்ஸ்பெக்டரிடம் பென்ட்ரைவ் ஆதாரத்தை கொடுத்த நிலையில் இன்று, பென் ரைவ்வை வாங்கிய இன்ஸ்பெக்டர் நேராக காட்டு ராஜாவை சந்திக்க அவர் காட்டு ராஜாவின் விசுவாசி என்பது தெரிய வருகிறது. இங்கு சாமந்தி அப்பாவுக்கு தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்க மருது போனை கவனிக்காமல் இருக்கிறார்.
அடுத்ததாக காட்டு ராஜா மருதுவை தேடி அலைய மறுபக்கம் பார்வதி அரசியின் ரூமை சுத்தம் செய்யும் போது ஒரு மோதிரம் கீழே விழ பார்வதி அதை எடுத்து அரசியிடம் கொடுக்கிறாள். முதலில் சாதாரணமாக பார்க்கும் அரசி கொஞ்ச நேரத்தில் அது ராஜ முத்திரை பதித்த மோதிரம் என்பதை அறிகிறாள்.
உங்க வீட்ல ஒரு பொருளை வைத்துவிட்டு வந்து இருக்கேன் என ரோஜா சொன்ன விஷயத்தை நினைத்து பார்க்க மறுப்பக்கம் ரோஜா இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க எனக்கு போன் பண்ணுவீங்க என ஸ்கெட்ச் போட்டு ரூமில் யோசித்துக் கொண்டே ஒன் டூ த்ரீ என்று சொல்ல அரசியிடமிருந்து போன் கால் வருகிறது.
அரசி ரோஜாவை வீட்டுக்கு வர சொல்ல ரோஜா என்ன வர சொல்லுவனு எனக்கு தெரியும் என்று மனதுக்குள் கணக்கு போடுகிறாள். அதன் பிறகு ரோஜா வீட்டிற்கு வர அரசி அவளை வரவேற்று சோபாவில் உட்கார சொல்ல அவமானப்பட்ட இடத்தில் கம்பீரமாக உட்காருவதை நினைத்து ரோஜா சந்தோஷப்படுகிறாள்.
அரசி இது உன்னுடைய மோதிரமா? என்று மோதிரத்தை காட்ட ரோஜா ஐயோ ஆமாம் இத தான் தேடிக்கிட்டு இருந்தேன்.. இது எங்க வாங்கி விரலில் அணிந்து கொண்டு அழகு பார்க்க சாமந்தி இதைப் பார்த்து அக்கா ஏன் இவ்வளவு பொய் சொல்றா என அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்பத்திரியில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்.. வீட்டை விட்டு வெளியேற்றப்படும் செழியன் – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அயலி சீரியலில் நேற்றைய எபிசோடில் அர்ச்சனா அனுமதிக்கப்பட்ட ஆஸ்பிட்டலில் ஐ ஜி, ஜமுனா, வர்மா, வயது என அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக கூடிய நிலையில் இன்று மூவரும் ஒருவர் பார்த்து விடுவார்களா என்ற பில்டப் காட்சிகள் இருக்கிற அயலி அம்மாவை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாள்.
மறுபக்கம் காளியப்பன் எல்லாத்துக்கும் காரணம் செழியன் தான் என்று சொல்லி அவரை அடித்து வீட்டை விட்டு வெளியே போக சொல்ல வீட்டுக்கு வரும் சிவா ஆகும் உங்க போன்ல இருந்து தான் மெசேஜ் போயிருக்கு என்று சொல்ல இந்திராணி செழியனை வீட்டை விட்டு வெளியே போயிடுங்க என கோபப்பட செழியன் அங்கிருந்து கிளம்பி செல்கிறான். அதன் பிறகு பிளாஷ்பேக்கில் செழியன் போனை எடுத்து ரிப்போர்ட்டருக்கு மெசேஜ் அனுப்பியது காளியப்பன் தான் என்பது தெரிய வருகிறது.
பதிலாக நர்சை பேஷண்டாக மாற்றி வெளிய அனுப்பி வைக்கிறார். அயலி டாக்டருடைய வெளியே செல்ல எதிரில் வர்மாவின் டாக்டருடைய இருவரும் ஒருவர் ஒருவர் பார்த்து டாக்டர் என நினைத்து வணக்கம் சொல்லிக் கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பர்பாமென்ஸை போட்ட அப்பத்தா.. மனம் மாறிய குடும்பம் – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்
வாகை சூடவா மீனாட்சி தென் மொழியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்று, இங்கே அப்பத்தா வீட்டில் சக்தியும் லோகுவும் தேன்மொழி வயிற்றில் வளருவது நம்ம விட்டு வாரிசு.. இப்படி வீட்டை விட்டு போயிட்டாளே என வருத்தப்படுகிறார்கள். மறுபக்கம் மீனாட்சி தேன்மொழி சாப்பிடாமல் இருக்க சுமதி சின்ன வயசுல இங்க ரெண்டு பேரு சாப்பிடாம இருந்தால் உங்களை இப்படித்தான் சாப்பிட வைப்பேன் என்று சாப்பாட்டை ஊட்டி விட மூவரும் எமோஷனலாகின்றனர்.
மறுபுறம் மனோ, சக்தி மற்றும் லோகு ஆகியோர் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க அப்பத்தா அங்கு வந்து என்ன சாப்பாடு அப்படியே இருக்கு என்று கேட்க தேவி யாரும் சாப்பிட வரல என்று சொல்கிறாள். அதைத் தொடர்ந்து அப்பத்தா டேய் மனோ சாப்பிட வாடா.. சக்தி, லோகு சாப்பிட வந்த என்று அழைக்க எல்லோரும் அப்பத்தா கூப்பிட்டதால் மறுக்காமல் சாப்பிட வருகின்றனர். இதையடுத்து அப்பத்தா நான் என்ன தேன்மொழியை குழந்தை பெத்துக்க கூடாதுன்னா சொன்ன? இவ யாரு இந்த வீட்டு பொண்ணு.. இதை குழந்தை இல்லாம போனதுக்கு யார் காரணம்? அதை யார் சரி பண்ணனும்?
ஒரு ஆம்பளை இல்லாமல் சின்ன குழந்தையா இருந்த லோகு கைய புடிச்சுகிட்டு தன்னந்தனியே வந்து உழைச்சி முன்னேறி இருக்கேன். ஆம்பள துணை இல்லாமல் குடும்பத்தை நடத்துவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆனா இன்னைக்கு இந்த அப்பத்தா சொல்றது தப்பா தெரியுது அளவுக்கு வளர்ந்துட்டீங்க என்று கண்கலங்கி அழுது டிராமா போட தேவி நான் குழந்தை பெத்துகிட்டு பிறகு தேன்மொழி குழந்தை பெத்துக்கட்டா என்ன? எனக்கு இந்த வீட்ல இடம் இருக்கு ஆனா கருவை கலைச்சிட்டு வரட்டும்.. அப்படி இல்லனா அப்படியே போகட்டும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
