சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் அக்கட்சியை வளர்க்க, ஆர்வம் காண்பித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவை சேர்ந்த சிலருடன், அன்புமணி ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, ஆந்திராவில் பா.ம.க., பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
மாநில ஒருங்கிணைப்பாளராக, முன்னாள் எம்.பி., செந்தில், எம்.எல்.ஏ., கணேஷ்குமார், குணாநிதி தன்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காக்கிநாடா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் என பல்வேறு பகுதிகளுக்கு, 44 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பா.ம.க., இளைஞர் சங்கம், மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகளுடன், பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பா.ம.க., அணிகளின் அடுத்தக்கட்ட பணிகள் தொடர்பாக, அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார்.
