சென்னை: ”தமிழகத்தில் இருந்து, 2025 – 26ல் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 14,862 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 35 சதவீதம்,” என, தோல் ஏற்றுமதி கவுன்சிலின் தென் மண்டல தலைவர் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த, 2025 – 26ல் தமிழகத்தில் இருந்து, 14,862 கோடி ரூபாய் மதிப்பிற்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது, நாட்டின் மொத்த ஏற்றுமதியான, 41,901 கோடி ரூபாயில், 35.50 சதவீத பங்கு. கடந்த, 2024 – 25ல் தமிழக தோல் பொருட்கள் ஏற்றுமதி, 14,358 கோடி ரூபாயாக இருந்தது.
மேற்காசிய போரால், தோல் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளுடன் நம் நாடு மேற்கொண்டு வரும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களால், தோல் பொருட்கள் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
