சென்னை: சென்னையில் இன்று (செப் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2320 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 290 ரூபாய் அதிகரித்து 14,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 01) ஆபரண தங்கம், கிராம் 14,175 ரூபாய்க்கும், சவரன், 1,13,400 ரூபாய்க்கும் விற்பனையானது.வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (செப் 02), தங்கம் விலை கிராமுக்கு, 225 ரூபாய் குறைந்து, 13,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,800 ரூபாய் சரிவடைந்து, 1,11,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. கடந்த மாதம், 25ம் தேதி தங்கம் சவரன், 1,20,080 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு, 8,480 ரூபாய் சரிவடைந்து உள்ளது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (செப் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2320 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 290 ரூபாய் அதிகரித்து 14,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 255 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பு வீடியோ!
தங்கம் விலை கடும் உயர்வு; இன்றைய விலை நிலவரத்தை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
