இதை செய்தால் மட்டுமே மற்றொரு உச்சி மாநாட்டிற்குத் தயார்; ரஷ்ய அதிபர் புடினுக்கு டிரம்ப் நிபந்தனை

வாஷிங்டன்: உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ரஷ்யா தயாராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, அதிபர் புடினுடன் மற்றொரு உச்சி மாநாட்டை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அனைவருடனும் நல்லுறவைப் பேண விரும்புகிறோம். அது வணிகத்திற்குச் சிறந்ததாக அமைய வேண்டும்உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ரஷ்யா தயாராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, அதிபர் புடினுடன் மற்றொரு உச்சி மாநாட்டை நடத்தத் தயாராக இருக்கிறேன்.

வெறும் பேச்சுவார்த்தைக்காக அல்லாமல், போர் முடிவுக்கு வரும் தருவாயில் உண்மையான அமைதி ஒப்பந்தத்தை எட்டும் சூழல் வரும்போது புடினை சந்திப்பேன். இந்தப் போர் ஒருபோதும் நடந்திருக்கவே கூடாது; 2020 தேர்தலில் முறைகேடு நடந்திருக்காவிட்டால், அந்தப் போர் ஒருபோதும் நடந்திருக்காது. மேலும், அது நான்கு ஆண்டுகளாக நடக்காமலும் இருந்தது. இரு அதிபர்களுக்கும் இடையே மிகப்பெரிய பகைமை நிலவுகிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Source link