ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ சம்பளம் எவ்வளவு?

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஜான் டெர்னஸ் மற்றும் நிர்வாக தலைவர் டிம் குக்கின் சம்பளம் குறித்து அந்த நிறுவனம், அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்த டிம் சமீபத்தில் அந்தப் பதவியில் இருந்து பதவி விலகினார். இதனையடுத்து ஜான் டெர்னஸ் புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். டிம் குக்கிற்கு நிர்வாக தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கான சம்பளம் குறித்தவிவரங்களை, அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின்படி இந்த நிதியாண்டில் டெர்னஸின் வருமானம் 58 மில்லியன் அமெரிக்க டாலர் (551 கோடி ரூபாய்) ஆகும். டிம் குக்கிற்கு 47 மில்லியன் டாலர்( 446 கோடி ரூபாய்) அடங்கி உள்ளது.

டெர்னசுக்கான சம்பளத்தில் ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர் சம்பளமும், 55 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளும் அடங்கும்.டிம் குக்கின் ஆண்டு சம்பளத்தில் 2 மில்லியன் டாலரும், 45 மில்லியன் மதிப்பு பங்குகளும் அடங்கும்.டிம் குக் சிஇஓ ஆக இருந்த போது 3 மில்லியன் டாலர் சம்பளம் பெற்றார். கடந்த ஆண்டு 74.3 மில்லியன் டாலர் சம்பாதித்தார்.

Source link