மணிப்பூரில் 2வது நாளாக வன்முறை: 25 வீடுகளை தீ வைத்து கொளுத்திய மர்ம கும்பல்

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. 2வது நாளாக 25க்கும் அதிகமான வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றம் நீடித்துள்ளது.

மணிப்பூரில் தேய்ஹேங்க் குகி கிராமத்தில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல் திடீரென தாக்குதல்களில் இறங்கியது. கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் தாக்கிய இந்த கும்பல், அங்கே இருந்த வாகனங்களையும் விட்டுவைக்கவில்லை.

அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் இரு பெண்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தின் தாக்கம் மறைவதற்குள், காங்போக்பி மாவட்டம், டிபோரம் கிராமத்தில் இன்று (செப்.2) மீண்டும் வன்முறை சம்பவம் அரங்கேறியது. அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல், 25க்கும் மேற்பட்ட வீடுகளை தீ வைத்து கொளுத்தியது. இதில் 5 வீடுகள் நேபாளி இனத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் ஆகும்.

தாக்குதலுக்கான காரணம் குறித்து எவ்வித தகவல்களும், தாக்கியவர்கள் யார் என்ற விவரங்களும் வெளியாகவில்லை. தொடர் தாக்குதல்கள் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Source link