இந்தியாவிற்காக 4 தங்கப் பதக்கம் வென்ற வீரர்; காய்கறி விற்கும் அவலம்

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமர்தீப்குமார்(29), சர்வதேச அளவிலான எறிபந்து போட்டியில் இந்தியாவுக்காக 4 தங்கப் பதக்கங்களை வென்றவர். தற்போது இவர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார். அதன்காரணமாக, தலைநகர் ராஞ்சியின் வீதிகளில் காய்கறி விற்றும், வாடகைக்கு கார் ஓட்டியும் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.  

இந்நிலையில், இவர் வாங்கிய தங்கப் பதக்கங்களைத் தனது சிறிய கடையின் சுவற்றில் மாட்டி வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதனிடையே, உலக அளவில் தேசத்தின் பெருமையை நிலைநாட்டிய விளையாட்டு வீரருக்கு, முறையான அங்கீகாரம் கிடைக்காததே இந்த மோசமான நிலைக்குக் காரணம் எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், மிகச் சிறந்த விளையாட்டு வீரரான இவருக்கு, அரசு வேலை வாய்ப்போ அல்லது நிதியுதவியோ கிடைத்திருக்க வேண்டும். அவ்வாறு கிடைத்திருந்தால் இவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனப் பலரும் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்த நிலையை உணர்ந்து இவருக்கு உதவ அரசு முன் வர வேண்டும் எனவும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.  

Source link