இந்தியா – ஜப்பான் டி20 போட்டி: விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

டோச்சிகி,

இந்தியா – ஜப்பான் மோத உள்ள டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

டி20 போட்டி

ஐ.சி.சி. டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உலக சாம்பியனான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்தியா – ஜப்பான் அணிகள் மோதும் இந்த டி20 போட்டி வரும் செப்டம்பர் 22-ந்தேதி ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

இந்த நிலையில், இந்தியா – ஜப்பான் இடையிலான டி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

75 ஆண்டுகால உறவு

இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 75 ஆண்டுகால நட்புறவை கொண்டாடும் வகையில் இந்த டி20 போட்டி நடத்தப்படுகிறது. உலக சாம்பியனான இந்திய அணி ஜப்பானில் விளையாட இருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது.



Source link