இந்திய எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு இடம் தரமாட்டோம்: இலங்கை அதிபர் உறுதி

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் இலங்கை மண் ஒத்துழைக்காது என்று அந்நாட்டு அதிபர் அநுரகுமார திசநாயகே உறுதி அளித்துள்ளார்.

இலங்கைக்கு 3 நாட்கள் அரசு முறைப்பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் அநுரகுமார திசநாயகேவை சந்தித்து பேசினார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான 3 ஒப்பந்தங்களில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர். அப்போது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கை மண் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், அதிபர் அநுர குமார திசநாயகே உறுதி அளித்துள்ளார்.

சந்திப்பு குறித்து தமது எக்ஸ் வலைதள பதிவில் ராஜ்நாத் சிங் கூறியதாவது;

கொழும்பில் இன்று (செப்.9) இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகேவை சந்தித்து பேசினேன். இது ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்தது. பிரதமர் மோடியின் வாழ்த்துகளை அவரிடம் பகிர்ந்தேன்.

அவர் பதவியேற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரது அரசாங்கத்திற்கு வாழ்த்துகளை கூறினேன். இருநாடுகளும் மக்களின் நலன்களுக்காக இணைந்து பணியாற்றுவது என்று உறுதி பூண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link