இன்றும் பிக் பாஸில் சம்பவம் இருக்கு.. மீண்டும் ஜனநாயகம் பற்றி பேசிய விஜய் சேதுபதி

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் செப்டம்பர் 13ஆம் தேதிக்கான எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடு என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஆனால் அவர் நேற்று பேசிய லீடர்ஷிப் பற்றிய விஷயமே விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இன்று அவர் ஜனநாயகம் பற்றி பேசியதும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

சில விஷயங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது இருக்கிறது. நேற்று அவர் தலைவராக இருந்த சாதிகாவிடம் லீடர்னா என்னன்னு தெரியாமல்… லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு.. பிரச்சனை என்றதும் எதிர்க்கட்சி மீது பழியை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடுவது லீடர்ஷிப்புக்கான குவாலிட்டி இல்ல.. ஏமாற்றி வேலை..” என்று லீடர்ஷிப் பற்றி பேசியிருந்தார்.

இதுதான் நேற்றிலிருந்து இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் சேதுபதி விஜய் பற்றி தான் இப்படி பேசிவிட்டார் என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு இடையே இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே முனியம்மாவிடம் விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார்.

அப்போதும் இந்த வீட்டோட விதிமுறைகளை இதுவரைக்கும் பிக் பாஸ் தான் கொடுப்பார். ஆனால் இந்த முறை உங்களை எழுத சொல்லி இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று கேட்ட, அதற்கு முனியம்மாள் அதுதான் டோமாக்ரசி ரூம் எல்லாம் இதற்கு முன்பு கிடையாதே இந்த முறை தானே உண்டு என்று சொல்கிறார். அதற்கு விஜய் சேதுபதி சிரித்தபடியே அது டேமாக்ரசி ரூமா என்று கேட்டிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த ரசிகர்கள் எல்லோரும் முனியம்மாள் பேச்சைக் கேட்டு கைதட்டியதும் அதனால் கடுப்பான விஜய் சேதுபதி நீங்க வேற கைதட்டி அந்த அம்மாவை மேலும் உசுப்பேத்தி விட்டுறாதீங்க என்று சொல்லி இருக்கிறார். அதனால் இன்றைய எபிசோடில் முனியமாக்கு பதிலடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு இருக்கிறது. கடந்த வாரத்தில் என்ன பேசுகிறோம் எது பேசுகிறோம் என்று தெரியாமலேயே முனியம்மா மற்ற எந்த போட்டியாளரையும் பேசவிடாமல் தடுத்துக் கொண்டு இருந்தது பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்கி இருந்தது.

இதனால் இவருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அவர் பேசுவது தவறு என்று புரிய வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அது இப்போது நடந்திருக்கிறது. நேற்றைய எபிசோடு லீடர்ஷிப் பேச்சை வைத்து பிரபலமானது. ஆனால் இன்றைய எபிசோடு முனியம்மாவை வைத்து பிரபலமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இன்றும் விஜய் பற்றி ஏதாவது பதில் தாக்குதல் விஜய் சேதுபதி கொடுப்பாரா? என்றும் சிலர் காத்திருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.