‘இளைஞர்களின் உணர்வை மதிக்கிறேன்’-ராஜினாமாவை அறிவித்தார் தர்மேந்திர பிரதான்

மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், கல்வித் துறையின் எதேச்சாதிகாரப் போக்கை கண்டித்தும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகப் போராளிகள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் கொதிநிலையை எட்டி வருகிறது.

ஜனநாயக முறையில், தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் நியாயமான தேர்வுக்காகவும் போராடும் இளம் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறையும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புப் படைகளும் அராஜகமான முறையில் தடியடி நடத்தின. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து போரட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

‘இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இளைய தலைமுறை கனவுகளின் நினைவாக்குவது நமது கடமை. கடந்த 10 நாட்களாக நடந்த நிகழ்வுகள் எனக்குத் தனிப்பட்ட முறையில் அவமானத்தை தந்துள்ளது. முதல் நாளில் இருந்தே நடந்த தவறுகளுக்கான பொறுப்பை நான் ஏற்று வந்துள்ளேன்.மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி சீர்திருத்தத்திற்காக 40 ஆண்டுகளாக அர்ப்பணித்துள்ளேன். எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்த  பிரதமர் மோடிக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Source link