கொல்கட்டா: இந்தியாவுக்கு எதிரான நட்பு கால்பந்தில் பங்கேற்கும் உருகுவே அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய கால்பந்து அணி, மூன்று நட்பு போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் படி 138 வது இடத்தில் உள்ள இந்திய அணி, சமீபத்தில் உலக கோப்பை தொடரில் பங்கேற்ற பனாமா, பிரேசில், உருகுவே என மூன்று அணிகளுடன் மோத தயாராகி வருகிறது.
வரும் 25ல் நடக்க உள்ள முதல் போட்டியில் இந்திய அணி, 44 வது இடத்தில் உள்ள பனாமாவுடன் மோத உள்ளது. இப்போட்டி பெங்களூரு கன்டீவ்ரா மைதானத்தில் நடக்கும்.
பின், அக். 3ல் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன உலகின் ‘நம்பர்-5’, பிரேசில், அக். 6ல் உலக கோப்பை தொடரில் இரு முறை சாம்பியன் ஆன உருகுவே அணிகளுடன், விளையாட உள்ளது. இப்போட்டிகள் கொல்கட்டாவில் நடக்கும்.
உருகுவே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டீகோ போர்லன் பயிற்சியாளராக உள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் பெடெரிகோ வால்வெர்டே, லிவர்பூர் வீரர் டார்வின் நுனெஸ், ஆல்வரோ ரோட்ரிக்ஸ், மார்டின் சாட்ரியானோ, அகஸ்டின், மார்டினஸ், ரோட்ரிகோ அகுயரே என நட்சத்திர பட்டாளங்கள் இந்தியா வர காத்திருக்கின்றனர். கோல் கீப்பர்களாக சான்டியாகோ, கிறிஸ்டோபர் பியர்மரின், இனாசிகோ உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவுடன் மோதல்
இந்திய பெண்கள் கால்பந்து அணி (‘நம்பர்-69’), வரும் அக். 5, 13 ல் சொந்தமண்ணில் இரண்டு நட்பு போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
உலக தரவரிசையில் 27 வது இடத்தில் உள்ள ரஷ்யாவுடம் மோத ஏற்பாடுகள் நடக்கின்றன. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’), ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அனுமதித்த பின் போட்டி நடக்கும்.
