எதிர்காலத்தில் நடுத்தர, சிறிய கோவில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும்; அமைச்சர் ரமேஷ்

சென்னை: எதிர்காலத்தில் நடுத்தர, சிறிய கோவில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும் என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 52 கோவில்களில் செல்போனை பாதுகாப்பாக வைத்து செல்வதற்கு கட்டணம் வசூல் செய்வது குறித்து அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கோயில்களில் செல்போனை பாதுகாக்க 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நடுத்தர, சிறிய கோவில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும். சிறிய கோவில்களில் அதன் வருவாயில் இருந்து மட்டும் செல்போன் பாதுகாப்பு செலவை மேற்கொள்வது சிரமமாக இருக்கும்

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க ரூ.5 என குறைந்தபட்ச கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளது. செல்போன் பாதுகாக்க வசூலிக்கப்படும் ரூ.5 கட்டணம் கோவில் வருவாய் ஈட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டதல்ல; ஊழியர்கள், தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளை ஈடுகட்ட மட்டுமே குறைந்தபட்சக் கட்டணம் வசூல்;கோவிலுக்கு அருகே வசிப்பவர்கள் செல்போனை வீட்டிலும், வெளியூரிலிருந்து வருபவர்கள் வாகனம் அல்லது தங்குமிடத்தில் வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லலாம். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

Source link