புதுடில்லி: நாட்டின் எத்தனால் வினியோகத்தில் தானிய அடிப்படையிலான எத்தனால் கிட்டத்தட்ட 70 சதவீதம் பங்களித்திருப்பதாக அனைத்திந்திய டிஸ்டில்லர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஆக., மாத நிலவரப்படி நாட்டின் எத்தனால் வினியோகம் 895 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. இது ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய 1,048 கோடி லிட்டரில் 85 சதவீதமாகும். இதில் 624 கோடி லிட்டர் தானிய அடிப்படையிலான எத்தனாலாகும். இது எத்தனால் வினியோக ஆண்டில் கிட்டத்தட்ட 70 சதவீதமாகும்.
தானிய அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியில் மக்காச்சோளம் பெரும் பங்கு வகிக்கிறது. அதற்கடுத்து இந்திய உணவு கழகம் வழங்கும் அரிசி உள்ளது. கரும்பு அடிப்படையிலான எத்தனால் தயாரிப்பு மூன்றாவது இடத்தில் உள்ளது. எத்தனால் வினியோகம் வளர்ந்து வரும் அதேநேரத்தில் தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
(INFO)
எத்தனால் உற்பத்தி
(ஆகஸ்ட் 2026 வரை)
ஒப்பந்தப்படி எத்தனால் அளவு 1,048 கோடி லிட்டர்
வழங்கப்பட்ட எத்தனால் அளவு 895 கோடி லிட்டர்
தானிய அடிப்படையிலான எத்தனால் தயாரிப்பு
மக்காச்சோளம் 345 கோடி லிட்டர்
எப்.சி.ஐ. உபரி அரிசி 214 கோடி லிட்டர்
சேதமடைந்த அரிசி 64 கோடி லிட்டர்
கரும்பு அடிப்படையிலான எத்தனால் தயாரிப்பு
கரும்புச்சாறு 149 கோடி லிட்டர்
பி-ஹெவி., மொலாசஸ் 107 கோடி லிட்டர்
சி-ஹெவி., மொலாசஸ் 15 கோடி லிட்டர்
எத்தனால் தயாரிப்பு
ஒப்பந்தப்படி மொத்த பங்களிப்பு 85 சதவீதம்
தானியங்களின் பங்கு 70 சதவீதம்
கரும்பு 15 சதவீதம்
ஆதாரம்: அனைத்திந்திய டிஸ்டில்லர்ஸ் சங்கம்
