எவ்வளவு கோபம் வந்தாலும் டெக்ஷன் ஆக கூடாது என்று தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா, பி.பி.யை கட்டுப்பாட்டுக்குள் வைக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனித்துவமான குரல் வளத்தால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பிரபல பின்னணிப் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா. மென்மையான குரல், உணர்ச்சிப்பூர்வமான பாடல் பாடுவது மற்றும் இசையை நுணுக்கமாக அணுகும் திறன் என முக்கிய சிறப்பு அம்சங்களுடன் பாடல்களை கொடுத்து அசத்திய இவர்,இளம் வயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டதால், முறையான இசைப் பயிற்சியுடன் தனது பாடல் திறனை வளர்த்துக் கொண்டார்.
பின்னர் திரைப்படப் பின்னணிப் பாடகராக அறிமுகமாகி, பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1997-ம் ஆண்டு வெளியான அரசியல் என்ற படத்தில் வா சகி என்ற பாடலை பாடியிருந்தார். அதன்பிறகு, கொண்டாட்டம், பாரதி, மின்னலே, தீனா, பார்வை ஒன்றே போதுமே, ஷாஜகான், என பல ஹிட் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். கடைசியாக பேபி அண்ட் பேபி, என்ற படத்தில் சுவேதா மோகனுடன் இணைந்து பாடிய ஹரிஷ் ராகவேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் காதல், மெலடி, சோக உணர்வு மற்றும் இளமைத் துடிப்பு போன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியுள்ள ஹரிஷ் ராகவேந்திராவுக்கு இளைஞர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளத்தை உள்ளது. ஹரிஷ் ராகவேந்திராவின் இசைப் பயணம், திறமை, தொடர்ச்சியான முயற்சி மற்றும் இசையின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அவரது தனித்துவமான குரல் தமிழ் திரையிசையில் அவருக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், அவர் தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், எவ்வளவு தான் நியாயமான கோபமாவே இருந்தாலும் டென்ஷனாகக் கூடாது, உங்க உடல்நலத்தையும் உங்க குரலையும் பாதுகாப்பா வச்சிக்கணும்.ரத்தக் கொதிப்பைக் கட்டுப்பாட்டுல வச்சிக்கணும் ஏன்னா, உங்க மேல அன்பு கொண்டவங்க ஏராளமானவங்க விரும்பறதும் அதத்தான்”
அப்படீன்னு, என்னுடைய டாக்டரம்மா என் கிட்ட சில நாட்களுக்கு முன்னாடி அட்வைஸ் பண்ணாங்க… என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
