கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை எட்டியது: பெட்ரோலில் ரூ.5, டீசலில் ரூ.20 பொதுத்துறை நிறுவனங்களுக்கு இழப்பு

மேற்கு ஆசியாவில் மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள பொதுத்துறை எரினெய் நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் லிட்டருக்கு ரூ.20-க்கு மேலும் இழப்பைச் சந்தித்து வருவதாகத் துறை சார்ந்த வல்லுநர்களும் ஆய்வாளர்களும் கணித்துள்ளனர். 

ஆங்கிலத்தில் படிக்க:

மேற்கு ஆசியப் பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ‘ப்ரென்ட்’ கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை பேரல் ஒன்றுக்கு 100 டாலரைக் கடந்தது. இது கடந்த ஒன்றரை மாதங்களில் பதிவு செய்யப்பட்ட உச்சபட்ச விலையாகும்.

உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், தன் தேவைக்காக 88 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய்யை இறக்குமதியையே சார்ந்துள்ளது. ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மேற்கு ஆசியப் போர்ப் பதற்றத்திற்கு இடையே, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச அளவில் உயர்ந்த பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) வில ஏற்றத்தை முழுமையாகப் நுகர்வோருக்கு மாற்றாமல் பகுதியளவே உயர்த்தின. இதனால் இந்நிறுவனங்களுக்குப் பெருமளவில் நிதி இழப்பு ஏற்பட்டது.

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்த இழப்பு சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது சர்வதேச அளவில் மீண்டும் விலை உயர்ந்து வருவதால் இழப்பு அதிகரித்து, எண்ணெய் நிறுவனங்களின் நிதியாதாரத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து ஏப்ரல் – ஜூன் காலாண்டில் மட்டும் ரூ. 18,000 கோடிக்கும் அதிகமாக நிகர இழப்பைச் சந்தித்துள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகச் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசியாக மே மாதத்தில் நான்கு கட்டங்களாகப் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.35-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7.53-ம் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு பிறகும் பொதுத்துறை நிறுவனங்கள் சில்லறை எரிபொருள் விற்பனையில் தொடர்ந்து இழப்பையே சந்தித்து வந்தன.

“ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், ‘ப்ரென்ட்’ கச்சா எண்ணெய் விலை இன்று 100 டாலரைக் கடந்துள்ளது. இந்தியக் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் 109 டாலராக உள்ளது. செப்டம்பர் மாதத்தின் சராசரி விலையின் அடிப்படையில் பார்க்கும்போது, எண்ணெய் நிறுவனங்களுக்குப் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 23-ம் இழப்பு (பற்றாக்குறை) ஏற்படுகிறது. அதேபோல், உள்நாட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 200 வரை ஈடு செய்யப்படாத இழப்பு நிலவுகிறது” என்று ‘இக்ரா’ (ICRA) நிறுவனத்தின் கார்ப்பரேட் ரேட்டிங்ஸ் பிரிவு மூத்த துணைத் தலைவர் மற்றும் இணைத் தலைவர் பிரஷாந்த் வசிஷ்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “தற்போதைய புவிசார்-அரசியல் சூழல் தொடர்ந்து நீடித்தால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும். ஏனெனில் சீனா உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் உத்திசார்ந்த இருப்புகளில் இருந்து கணிசமான அளவு கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்தி வந்தன. தற்போது விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காலத்தில் அவை மீண்டும் சந்தைக்கு வரும்போது தேவை அதிகரிக்கும்” என்றுக்கூறினார்.

இந்தியாவின் மொத்த இறக்குமதியில் எரிசக்தி இறக்குமதியே மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் ஏற்படும் எந்தவொரு குறிப்பிடத்தக்க விலையேற்றமும் நாட்டின் வர்த்தகச் சமநிலை, நடப்புக் கணக்கு, பணவீக்கம் மற்றும் இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு ஆகியவற்றில் பெரிய அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும்.

அதிகப்படியான நுகர்வு மற்றும் இறக்குமதிச் சார்ந்து இருக்கும் காரணத்தால், உயர் கச்சா எண்ணெய் விலையின் பாதிப்பை இந்தியா ஏற்கெனவே எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது. இந்தியா ஆண்டிற்கு 180 கோடி முதல் 200 கோடி பேரல் வரை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1 டாலர் உயர்ந்தாலும், இந்தியாவின் ஆண்டு இறக்குமதிச் செலவு 200 கோடி டாலர் (2 பில்லியன் டாலர்) வரை அதிகரிக்கும். நோமுரா நிறுவனம் வெளியிட்ட மார்ச் மாத அறிக்கையின்படி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய ஆசியப் பொருளாதாரங்களில் தாய்லாந்து மற்றும் தென் கொரியாவுடன் சேர்ந்து இந்தியாவும் மூன்றாவதாக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயரும்போது, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 0.4 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் வணிகப் பொருட்களின் இறக்குமதியில் கச்சா எண்ணெய் மட்டுமே முதலிடத்தில் உள்ளது. வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2025-26 நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு சுமார் 135 பில்லியன் டாலராக இருந்தது. நடப்பு நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர் என்ற அளவிலேயே நீடித்து, இறக்குமதி அளவும் குறையாமல் இருந்தால், நாட்டின் எண்ணெய் இறக்குமதிச் செலவு 200 பில்லியன் டாலரைக் தாண்டிவிடும். ஒருவேளை விலை இதைவிட இன்னும் பல மடங்கு அதிகரித்தால், அதன் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும்.

மேற்கு ஆசிய மோதல்களுக்கு மத்தியில், ஏப்ரல் – ஜூலை காலத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 56 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 63.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதேவேளையில், இறக்குமதி அளவு 81.5 மில்லியன் டன்களில் இருந்து 81.9 மில்லியன் டன்களாக (சுமார் 600 மில்லியன் பேரல்கள்) மட்டுமே சற்று அதிகரித்துள்ளதாக பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல்லின் (பி.பி.ஏ.சி) தரவுகள் தெரிவிக்கின்றன.

“அமெரிக்க போர்க்கப்பலைத் தாக்க ஈரான் முயன்றதற்குப் பதிலாக, கார்க் தீவு அருகே இருந்த ஈரானிய எண்ணெய் டேங்கர்கள் மீது அமெரிக்கா கூடுதல் தாக்குதல்களை நடத்தியதுடன், 5 கப்பல்களைச் சேதப்படுத்தியது. இதன் விளைவாக ஈரான், ஜோர்டானை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதுடன், பெர்சிய வளைகுடாவில் உள்ள கப்பல்களும் தாக்கப்படலாம் என எச்சரித்துள்ளது. சமீபத்திய இந்த நிகழ்வுகள், பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்பதையே உணர்த்துகின்றன. அதுவரை, சந்தையில் கணிசமான அபாயக் கூடுதல் கட்டணம் தொடர்ந்து இருக்கும்” என்று ‘ஐ.என்.ஜி’ அமைப்பின் சரக்கு வர்த்தக உத்தியாளர்களான வாரன் பேட்டர்சன் மற்றும் எவா மேந்தே ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதேபோல, அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ‘ப்ரென்ட்’ கச்சா எண்ணெய் விலை சராசரியாக 100 டாலராக இருக்கும் என்று ‘மார்கன் ஸ்டான்லி’ அமைப்பின் உத்தியாளர் மார்ட்டின் ராட்ஸ் கணித்துள்ளார்.

Source link