கிராமங்களில் காஸ் சிலிண்டர் கட்டுப்பாடுகள் தளர்வு; இனி 25 நாட்களில் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு

புதுடில்லி: கிராமப்புறங்களில் காஸ் சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி அறிவித்துள்ளது.

காஸ் சிலிண்டர்கள் பதிவு செய்வதற்கான இடைவெளி என்பது 45 நாட்களாக கிராமப் புறங்களில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் தற்போது தளர்த்தி உள்ளது.

அதன் படி, இனி கிராமப்புறங்களில் காஸ் சிலிண்டர்களை 25 நாட்களில் மீண்டும் நிரப்பிக் கொள்ளலாம். முன்பு, ஒரு காஸ் சிலிண்டரை பெற்ற பிறகு, அடுத்த சிலிண்டருக்காக 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

அதாவது, காஸ் சிலிண்டர்களை மீண்டும் முன்பதிவு செய்ய 45 நாட்கள் காத்திருக்க வேண்டியது இருந்தது. அந்த இடைவெளி தற்போது 25 நாட்கள் என்று குறைக்கப்பட்டு உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது.

Source link