டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி இரவு உணவு விருந்து அளித்தார். இந்த விருந்தின் போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்ட குழுவினர் இணைந்து நடத்திய ‘பிரிக்ஸ் சிம்பொனி கலை நிகழ்ச்சி’யும் நடைபெற்றது. உணவு விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் குறித்த மெனு லிஸ்ட் பட்டியலும் வெளியாகியுள்ளன.
பிரிக்ஸ் நாடுகளின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இன்று உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில், இரவு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி உணவு இருந்து அளித்தார்.
இந்த உணவு விருந்தில், தலைவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்பட்டன என்பது குறித்த உணவு மெனு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைவர்களுக்கான உணவு விருந்தில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக சிறுதானிய உணவு வகைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.
கண்ட்வி மில்லே-ஃபுய், கும்ப் கலௌட்டி, பனீர் லபாப்தார், சிறுதானிய புலாவ் உள்ளிட்ட பல்வேறு உணவுகளும், பாரம்பரிய இந்திய இனிப்புகளும் மெனுவில் இடம் பெற்றன. சிறுதானிய புலாவில் கம்பு, இந்திய ரொட்டியில் சோளம், இனிப்பில் குதிரைவாலி ஆகியவை இடம்பெற்றிருந்தன. பிரதான உணவுகளில் பனீர் லபாப்தார் உணவு வகை இடம்பெற்றிருந்தது.
இமயமலைப் பகுதியில் கிடைக்கும் ‘மோரல்’ காளான்கள் மற்றும் மென்மையான அஸ்பாரகஸ், குங்குமப்பூ, உலர் திராட்சை மற்றும் மாம்ரா பாதாம் ஆகியவற்றுடன் சமைக்கப்பட்ட குச்சி மார்மிக் உணவும் இடம் பெற்றது.
கேரட் பீன்ஸ் பொரியல், துவரம் பருப்பு, புதிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தயாரிக்கப்பட்ட லேசான பருப்பு குழம்பான தக்காளி பெல்லே சாரு பரிமாறப்பட்டது.
மில்லெட் புலா, பீட்ரூட் ரைதா, ஜிலேபி, சாக்லேட் பழங்கள், மாதுளை ஜூஸ் மற்றும் இளநீர் ஆகியவையும் உணவு மெனுவில் இடம் பெற்றன. பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் முடிந்த பிறகு நடைபெற்ற உணவு விருந்தில், பிரதமர் மோடி மட்டுமின்றி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான், அர்ஜுன் ராம் மேத்வால் மற்றும் முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
