கொடியை கொடுங்கள், கோட்டையை பிடிப்போம்: ரவி மோகன் ரசிகர்கள் சந்திப்பில் நிர்வாகி பரபர பேச்சு

தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ரவி மோகன் தனது ரசிகர்களை சந்தித்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒரு நிர்வாகி கொடியை கொடுங்கள், கோட்டையை பிடிப்போம் என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், தமிழகத்தின் முதல்வராக 3 மாதங்களை நிறைவு செய்து ஆட்சி நடத்தி வருகிறார். தமிழக அரசியலில் விஜயின் வெற்றி, தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் அரசியல் கனவுக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. முன்னதாக, கடந்த சில மாதங்களாக தனுஷ் தனது ரசிகர்களை சந்திப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தனது செயல்பாடுகளை வெளிப்படையாக செய்து வருகிறார். 

இதன் மூலம் அவர் அரசியலில் அடியெடுத்து வைப்பது உறுதி ஆகியுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ரவி மோகன் ரசிகர்கள் சந்திப்பை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகனின் ரசிகர் ஒருவர், அண்ணா அழைப்பிதழ் கொடுங்கள், தமிழகத்தில் இருந்து அலையாய் வருவோம். கொடியை கொடுங்கள், உங்கள் ரசிகர்கள் கோட்டையை பிடிப்போம் என்று கூறியுள்ளார். அவர் பேசி முடித்தவுடன், உடனடியாக எழுந்து சென்று அவரிடம், ரவி மோகன் கட்டிப்பிடித்து பேசியுள்ளார். 

இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வரும் செப்டம்பர் 10-ந் தேதி ரவி மோகன் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link