சென்னை
கொய்யாப்பழ விளைச்சல் 60 சதவீதம் சரிந்துள்ளதாகவும், திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி சந்தையில் 1 கிலோ கொய்யா 125 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், ஆயக்குடி கொய்யா உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கொய்யா உற்பத்தியாளர் அஜ்மல் பாட்சா கூறியதாவது:
தமிழகத்தில் கொய்யாவுக்கென்றே செயல்படும் பிரத்யேக சந்தை இது. இங்கிருந்து திருச்சி, மதுரை, கோவை, கேரளா என்று பல ஊர்களுக்கு கொய்யா அனுப்பப்படுகிறது.
சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் 200 – 250 டன் கொய்யா இந்த சந்தைக்கு வரும்.
தற்போது விளைச்சல் குறைந்ததால் ஒரு நாளைக்கு 20 – 25 டன்தான் வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீதம் வரத்து குறைந்துள்ளது. கோடை காலம் என்பதால் கொய்யாவுக்கான தேவை அதிகரித்து உள்ளது. ஆனால், வரத்துதான் இல்லை. நேற்று 20 கிலோ பாக்ஸ் 2,500 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த மாதம் 1 கிலோ 55 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 125 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
அடுத்து ஜூன் மாதம்தான் கொய்யா வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இந்த விலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் கிலோவுக்கு 100 ரூபாய்க்கு கீழ் குறையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆயக்குடி கொய்யா சந்தை
மொத்த வரத்து
250 டன்
தற்போது
25 டன்
வரத்து சரிவு
90 சதவீதம்
விளைச்சல் சரிவு
60 சதவீதம்
